Sunday, November 24, 2024
காயிதே மில்லத் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளையின்சார்பில் நேர்மைக்கானகாயிதே மில்லத் விருது
Education

காயிதே மில்லத் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளையின்சார்பில் நேர்மைக்கானகாயிதே மில்லத் விருது

https://youtu.be/K3b4-RZG5rs காயிதே மில்லத் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளையின்சார்பில் அரசியல்; மற்றும் பொது வாழ்வில் நேர்மைக்கானகாயிதே மில்லத் விருது ஒவ்வோர் ஆண்டும் வழங்கப்பட்டுவருகிறது.  2022ஆம் ஆண்டிற்க்கான விருது வழங்கும் விழா31.01.2023  அன்று சென்னை மேடவாக்கம் காயிதே மில்லத்ஆடவர் கல்லூரி வளாகத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. ​இவ்விழாவில் காயிதேமில்லத் கல்வி மற்றும் சமூகஅறக்கட்டளையின் பொதுச் செயலாளரும் காயிதே மில்லத்அவர்களின் பேரருமான அல்ஹாஜ்     எம். ஜி. தாவூத் மியாகான்அவர்கள் விருதுகளை வழங்கி வாழ்த்துரை வழங்கினார்கள். தமிழ்நாடு அரசு தலைமை காஐp முனைவர் சலாவுத்தீன்முஹம்மத் அய்யூப் சாஹிப் அவர்கள் முன்னிலை வகிக்க,சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி திரு.டி.ஹரிபரந்தாமன்அவர்கள் தலைமையுரை ஆற்றினார். மேற்கு வங்க மேனாள்கூடுதல் தலைமைச் செயலர் திரு.கோ.பாலசந்திரன் அவர்கள், திரு ஹர்ஷ் மந்தேர் அவர்கள் மற்றும் முனைவர திரு எஸ்.சாதிக், முன்னாள் துணைவேந்தர் சென்னைப்பல்கலைக்கழகம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ​திராவிட கழகத்தின் தலைவர் திரு. கி.வீரமணிஅவர்களுக்கும். மூத்த பத்திரிக்கையாளர் மற்றும் 'தி வயர்' பத்திரிக்கையின் நிறுவன ஆசிரியர் திரு.சித்தார்த்வரதராஜன் அவர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டது.அவர்கள் விருதுகளை பெற்றுக்கொண்டு ஏற்புரைவழங்கினார்கள். “தனது உரையில் அமெரிக்க மண்ணை லிங்கன் மண் என்பதுபோல தமிழ்நாட்டை பெரியார் மண் என்று அழைக்கப்படவேண்டுமென காயிதேமில்லத் கல்வி மற்றும் சமூகஅறக்கட்டளையின் பொதுச் செயலாளரும் காயிதே மில்லத்அவர்களின் பேரருமான அல்ஹாஜ்     எம். ஜி. தாவூத் மியாகான்அவர்கள் வேண்டுகோள் விடுத்தார்.” மேலும் திரு. சித்தார்த் வரதராஜன் அவர்கள் பேசுகையில் எந்தசூழ்நிலையிலும் நம் உரிமைகளை விட்டுக்கொடுக்கக் கூடாது, அதே சமயத்தில் அதற்காக போராட வேண்டியுள்ளது, வகுப்புவாதத்தை எதிர்கொள்வது பெரும் சவாலாக உள்ளது எனகூறினார். அதனை தொடர்ந்து திராவிட கழகத்தின் தலைவர்திரு.கி.வீரமணி அவர்கள் பேசுகையில் சமூகநீதிக்காகஉங்களின் நம்பிக்கை யை நியாயமாக்க வேண்டுமெனகூறினார் . ​ காயிதே மில்லத் ஆடவர் கல்லூரியின் இயக்குநர், முனைவர். அ. ரஃபி, கல்லூரி முதல்வர், நிர்வாக மேலாளர்திரு.முகமது இக்பால் அவர்கள், பேராசிரியர்கள், மற்றும்அரசியல் பிரமுகர்கள்,  கல்வியாளர்கள், சமுதாயதலைவர்கள், சமூக ஆர்வலர்கள்,  பெற்றோர்கள் மாணவமாணவியர்கள் ஆகியோர் பெருந்திரளாக கலந்து கொண்டுசிறப்பித்தனர்.

Fortis Escorts, Okhla, New Delhi conducts Worlds shortest hip Ball replacement surgery in 15 minutes 35 seconds

Chennai, January 2023: 86-year-old female Patient,Sumitra Sharma, a resident of Gaya (Bihar) was a known Heart disease patient. Recently, she had a slipped in the washroom at her residence and suffered a fracture of left hip (neck of femur). She had a previous history of breast cancer and had undergoneangioplasty 18 years ago and was on double…

RAMRAJ Cotton ShowRoom Opened at ECR Road, Neelankarai, Chennai.

https://youtu.be/y9V9ZYGqp28 ராம்ராஜ் காட்டன் - நீலாங்கரை - சென்னை - ஷோரும் திறப்புவிழா - 12-01-2023 ' மதிப்பிற்குரியவர்களுக்கு ' … என்கிற முத்திரையுடன் கம்பீரமாக வலம் வரும் ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் ஆடைகள் அழகும் கம்பீரமும் இழையோடும் அற்புத கலவையாகும் பால் போன்ற வெண்மையான மென்மையான ராம்ராஜ்…