வேலைவாய்ப்புகள் பெற தனித்திறன்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்- முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி வி. திருப்புகழ்

வேலைவாய்ப்புகள் பெற தனித்திறன்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்- முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி வி. திருப்புகழ்

தாம்பரம், ஏப். :வேலைவாய்ப்புகள் பெற கல்வித் தகுதியுடன் தனித் திறன்களையும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று முன்னாள் ஐ.ஏ.எஸ்.அதிகாரி வி.திருப்புகழ் அறிவுறுத்தினார். சென்னையை அடுத்த கௌரிவாக்கம் நியூ பிரின்ஸ் ஸ்ரீ பவானி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 11-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில்  மாணவர்களுக்கு அவர்பட்டம் வழங்கி மேலும் பேசியதாவது: 

பட்டப்படிப்பை நிறைவு செய்து இருக்கும் நீங்கள் வேலைவாய்ப்பு பெற பல்வேறு சவால்களை  எதிர் கொள்ள நேரிடும்.அவற்றை பொறுமை யுடன் மன உறுதியோடு சமாளிக்க வேண்டும். 

கல்வித் தகுதிக்கேற்ற வேலை  கிடைக்க  நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டும். 

இந்தியாவில் பொறியியல் பட்டதாரிகளில் 48 சதவீதம் பேர் தகுதியான வேலை கிடைக்காமல்  சிரமப்படுகின்றனர்.  ஆண்டுக்கு பொறியியல் படிப்பை நிறைவு செய்யும் சுமார் 15 லட்சம் மாணவர்களில்  2.5 லட்சம் பேர் தான் வேலைவாய்ப்பைப் பெறுகின்றனர்.மற்றவர்கள்  படித்த படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைக்காமல் சம்பந்தம் இல்லாத துறையில் பணிபுரிகின்றனர் அல்லது வேலையின்றி உள்ளனர்.  மத்திய, மாநில அரசுகள் போதிய வேலை வாய்ப்பை  உருவாக்காமல் இருப்பதும், வேலைக்கேற்ற போதிய தகுதி இல்லாமல் இருப்பதும் முக்கியம் காரணம்.

நீங்கள் கல்லூரி படிப்புக்கும், வேலைக்குத் தேவையான தகுதிக்கும் இடையே உள்ள வேறுபாடு தான் வேலை இன்மைக்கு மிக முக்கிய காரணம். இதை நீங்கள்  புரிந்து கொண்டால் உங்களுக்கு எளிதில் வேலைவாய்ப்பைப் பெற முடியும். 

 தேவைக்கேற்ப தகுதியை வளர்த்துக் கொள்ள கல்வியுடன்  கடின உழைப்பு, விடா முயற்சி, பொறுமை, சகிப்புத்தன்மை, குழுவாக இணைந்து பணியாற்றும் திறன்,  தகவல் தொடர்புத்திறன்,  நேர்மை,பிரச்னைக்குத் தீர்வு காணும் திறன், தலைமை பண்பு, விரைவாக முடிவெடுக்கும் திறன், தலைமை ஏற்கும் திறன், ஒழுங்குபடுத்தும் திறன், உள்ளிட்ட திறன்களையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். அதற்கான வாய்ப்புகளையும் நீங்கள் உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.

 நியூ பிரின்ஸ் கல்விக் குழுமங்களின் தலைவர் கே. லோகநாதன்,  கல்லூரி துணைத் தலைவர் எல். நவீன்பிரசாத், இயக்குநர் ஏ.சுவாமிநாதன்,

செயலர் வி.எஸ். மகாலட்சுமி, 

 முதல்வர் டாக்டர் டி. சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Education