சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்கள் 9 நிமிடத்தில் 23 யோகாசனங்களை செய்து நோவா உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்…
சென்னையை அடுத்த குன்றத்தூரில் உள்ள ஸ்ரீ கிரிஷ் சர்வதேச தனியார் பள்ளி வளாகத்தில் 9 வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு 107 மாணவர்கள் தொடர்ந்து 9 நிமிடங்களில் விருக்ஷோசனம், சர்வாங்காசனம், புஜங்காசனம், பத்மாசனம் உள்ளிட்ட 23 உதையான யோகாசனங்களை தொடர்ச்சியாக செய்து உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டனர்…
இந்த சாதனையை நோவா உலக சாதனை நிறுவனம் அங்கீகரித்து உலக சாதனை முயற்சியில் ஈடுபட்ட மாணவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கியது…
ஸ்ரீ கிரிஷ் பள்ளியின் தலைவர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் செயல் அதிகாரி ஜெயா கார்த்திக் தொடங்கி வைத்த இந்த உலக சாதனை யோகா நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக நோவா உலக சாதனை நிறுவனத்தின் இயக்குனர்கள் ராஜ்குமார் நடராஜன் மற்றும் திலீபன் இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தனர்…