ஸ்ரீ கிருஷ் சர்வதேச பள்ளியில் அறிவியல், தொழிற்நுட்பம்,பொறியியல்,கணிதம் சார்ந்த ஆய்வகங்களின் துவக்க விழா

சென்னையடுத்த கோவூரிலுள்ள ஸ்ரீ கிருஷ் சர்வதேச பள்ளியில் அறிவியல், தொழிற்நுட்பம்,பொறியியல்,கணிதம் சார்ந்த ஆய்வகங்களின் துவக்க விழா மற்றும் பள்ளி மாணவர்கள் குழுக்கள் பதவியேற்பு விழாவினை மக்கள் விஞ்ஞானி ஐயப்பன் கலந்து கொண்டு துவக்கி வைத்து மாணவர்களின் அறிலியல் சார்ந்த கண்டுபிடிப்புகளை பார்வையிட்டு அதன் செயல்பாடுகளை கேட்டறிந்தார்…

புதிதாக திறக்கப்பட்ட இந்த STEM ஆய்வகத்தில் ரோபோடிக்,செயலியில்,காலநிலை மாற்றம், விண்வெளி ஆராய்ச்சி,செயற்கை நுண்ணறிவு, முப்பரிமாண பிரிண்டிங் உள்ளிட்ட பல்வேறு செயல்முறைகள் காட்சிப்படுத்தபட்டன…

பின்னர் அப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களின் குழு மேலான்மை மற்றும் குழுவினை வழி நடத்துதலை ஊக்குவிக்கும் விதமான மாணவர்கள் குழுக்களின் பதவியேற்பு விழா நடைபெற்றது…

ஸ்ரீ கிருஷ் சர்வதேச பள்ளியின் தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில்,பள்ளியின் தலைமை செயல் அதிகாரி ஜெய் கார்த்திக் உள்ளிட்ட பள்ளியின் ஆசிரியர்கள், ஆய்வக, உடற்கல்வி ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர்…

Education