9 மாதம் கர்பிணி பெண் தொடர்ந்து 1 மணி நேரம் சிலம்பம் சுழற்றி உலக சாதனை

செந்தமிழ் வீர சிலம்பம் கலைத்திடத்தின் சார்பாக சுதா என்கிற 9 மாத கர்பிணி பெண்மணி தொடர்ந்து 1 மணி நேரம் சிலம்பம் சுழற்றி நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்…

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்த நோபல் உலக சாதனை படைக்கும் நிகழ்ச்சியில் சென்னை சின்னமலையை சார்ந்த 9 மாத கர்பிணி பெண்மணி சுதா தொடர்ந்து 1 மணி நேரம் இடைவிடாது ஒற்றை கொம்பு, இரட்டை கொம்பு ஒற்றைச்சூருள்,மான் கொம்பு, ஒற்றை மற்றும் இரட்டைவாள் உள்ளிட்ட பல்வேறு வகையிலான சிலம்பம் சுழற்றி நோபல் உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டு சாதனை படைத்துள்ளார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு கைத்தட்டி உற்சாகப்படுத்தினார்.

இந்த சாதனையினை நோபல் உலக சதனை புத்தக நிறுவனம் அங்கீகரித்து சாதனை புத்தகத்தில் இடம் பெற செய்துள்ளது.

மேலும் இந்த உலக சாதனை நிகழ்வின் போது செந்தமிழ் வீர சிலம்பம் கலைக்கூடத்தின் பொதுச் செயலாளர் மோகன் அரிவானந்தம், தொழில்நுட்ப இயக்குனர் பரசுராமன் மற்றும் சாதனை முயற்சியில் ஈடுபட்ட சுதா வள்ளப்பன் அவர்களின் குடும்பத்தார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு உற்சாகப்படுத்தினர்…

Chennai