EL-DENT சிறப்பு பல் மருத்துவமனை திறப்பு.
சென்னை நந்தனத்தில் உள்ள வெங்கடேஸ்வரா மருத்துவமனையில்(ஆவின் அலுவலகம் எதிரில்) முதியோர்களுக்கு என்று இந்த மருத்துவமனையில் இந்த சிறப்பு வாய்ந்த பல் சிகிச்சை பிரிவு துவக்கப்பட்டது.
இந்த மருத்துவ பிரிவினை முதியோர்களுக்கான சிறப்பு மருத்துவர்Dr.V.S. நடராஜன் வெங்கடேஸ்வரா மருத்துவமனை இயக்குனர் தில்லை வள்ளல்.EL-DENT மருத்துவ பிரிவில் மருத்துவர்கள் முரளி கார்த்திக். யுவராஜ். ஹரி. மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் செல்வராணி மோகன் ஆகியோர் இணைந்து குத்துவிளக்கு ஏத்தி இன்று மருத்துவ சேவையினை துவக்கி வைத்தனர்.
பின்பு செய்தியாளர் சந்தித்தDr.V.S. நடராஜன் அவர்கள் இந்த மருத்துவ சிகிச்சையானது முதியோர்களுக்கு என்று இந்த இளம் மருத்துவர்கள் ஒன்றிணைந்து இந்த சேவையினை துவக்கி உள்ளனர். பல் என்பது ஒவ்வொருவருக்கும் முக்கியமான மானதாகும் ஆகும்.
பல் போனால் சொல் மட்டும் போகாது முகப்பொலிவும் நம் உண்ணுகின்ற உணவின் அளவு குறைந்துவிடும் அதனால் ஒவ்வொருவருக்கும் பல் முக்கியமானவர்கள் அதனை பேணி காக்கவே இந்த சிறப்பு பிரிவு இந்த மருத்துவமனையில் துவங்கப்பட்டுள்ளது இதனை முதியோர்கள் மட்டுமல்லாமல் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.
மேலும் மருத்துவமனை இயக்குனர் தில்லை வள்ளல் அவர்கள் கூறுகையில் இந்த மருத்துவ பிரிவு அமைப்பதற்கு இந்த டாக்டர்கள் என்னை அனுகியபோது அதற்கு நான் இதுபோன்ற நற்செயல்களை ஊக்குவிக்கும் விதமாக அவர்களுக்கு அனுமதி அளித்தேன்.
இந்த பிரிவானது எனது மருத்துவமனையில் செயல்படுவது சிறப்பானதாகும்.
முதியவர்கள் மற்றும் இன்றி அனைவரும் பயமில்லாமல் இந்த சிகிச்சியினை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவித்தார்.
மேலும் மருத்துவ பிரிவின் மருத்துவர்கள் முரளி கார்த்திக். யுவராஜ். ஹரி ஆகியோர் அனைவரையும் வரவேற்று உபசரித்தனர்.