உலக பாதுகாப்பு அமைப்பின் சார்பில்4 ஆம் ஆண்டு தொழில்முறை மேம்பாட்டு கருத்தரங்கம் மற்றும்தொழில்சார் விருதுகள்

உலக பாதுகாப்பு அமைப்பின் சார்பில்4 ஆம் ஆண்டு தொழில்முறை மேம்பாட்டு கருத்தரங்கம் மற்றும்
தொழில்சார் விருதுகள் வழங்கும் விழாவில் அமைச்சர் மெய்யநாதன் கலந்துகொண்டு விருதுகளை வழங்கினார்….

உலக பாதுகாப்பு அமைப்பின் சார்பாக
4ஆம் ஆண்டு தொழில்முறை மேம்பாட்டு கருத்தரங்கம் மற்றும்
தொழில்சார் ஆரோக்கியம், பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் 2023 ஆம் ஆண்டிற்கான விருதுகள் வழங்கும் விழா சென்னை மணப்பாக்கத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது…
உலக பாதுகாப்பு அமைப்பின் இந்திய தலைவர் கண்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக தமிழக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறையின் அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு இந்தியாவில் உள்ள 18 மாநிலங்களை சார்ந்த 100க்கும் மேற்பட்ட தொழில்சார் பாதுகாப்பு துறையில் சிறப்பாக செயலாற்றிய நிறுவனங்களுக்கு சிறப்பு தொழில்சார்,ஆரோக்கியம், பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் 2023 ஆம் ஆண்டிற்கான விருதுகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

மேலும் இந்நிகழ்ச்சியில் விருதுகள் வழங்கும் குழுவின் தலைவர் மார்ட்டின் கோமர்சல், தொழிற்சாலைகள் பாதுகாப்பு ஆலோசனை நிர்வாகத்தின் ஓய்வு பெற்ற இயக்குனர் G.M.E.K.ராஜ் உள்ளிட்ட உலக பாதுகாப்பு நிறுவனத்தின் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்…

நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய உலக பாதுகாப்பு அமைப்பின் இந்திய தலைவர் கண்ணன் கூறுகையில்

உலக பாதுகாப்பு அமைப்பின் மிக முக்கிய நோக்கமாக தொழிற்சாலைகள் நிறுவனங்களில் செயல்படும் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கி பாதுகாப்பில் சிறப்பாக செயல்படும் தொழிற்சாலைகள் நிறுவனங்களுக்கு ஊக்கமளிக்கும் விதமாக உலக பாதுகாப்பு அமைப்பின் சார்பாக இந்த விருதுகள் தொடர்ந்து 2வது ஆண்டாக வழங்கப்படுவதாகவும்.

இது போன்ற விருதுகள் வழங்குவதன் மூலம் வரும் காலங்களில் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு மேலும் அதிகரிக்கும் என தெரிவித்தார்..

Political