மதிப்பெண்களை காட்டிலும் அறிவு சார்ந்த மாணவர்களை உருவாக்குவதே தங்கள் பள்ளியின் நோக்கமாக கொண்டு செயல்படுவதாக ஸ்ரீ கிரிஷ் சர்வதேசப் பள்ளியின் தாளாளர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்…
சென்னையையடுத்த குன்றத்தூர் கோவூரில் உள்ள ஸ்ரீ கிரிஷ் சர்வதேச பள்ளியில் டெக்னோசியம் 2023 என்ற தலைப்பிலான 2 நாள் கண்காட்சியில் மழலைப் பள்ளி முதல் பத்தாம் வகுப்பு மாணவர்களால் 200க்கும் மேற்பட்ட அரங்கங்களில் 3000 க்கும் மேற்பட்ட படைப்புகளை காட்சிப்படுத்தினர்…
இந்த கண்காட்சியில் தமிழர்களின் கலாச்சாரம், பண்பாடு,நாகரீகம் உள்ளிட்ட பல்வேறு படைப்புகளை காட்சிப்படுத்தி தங்களின் அறிவு திறமைகளை வெளிப்படுத்திருந்தனர்…
இங்கு காட்சி படுத்தப்பட்டிருந்த மாணவர்களின் படைப்புகள் பார்வையாளர்கள் பலரின் கவனத்தை வெகுவாக ஈர்த்தன.
மேலும் ஆங்கிலம், கணிதம் என ஒவ்வொரு பாடப்பிரிவு தலைப்புகளிலும் மாணவர்கள் அரங்கத்தை அமைத்திருந்தனர்.
இந்த கண்காட்சியினை பார்வையிட்ட பின்
ஸ்ரீ கிரிஷ் பள்ளியின் தாளாளர் கிருஷ்ணமூர்த்தி செய்தியாளர்களிடம் பேசுகையில் …
பள்ளி மாணவர்களின் திறமையை வெளிக்காட்டுவதற்கான தளமாக இந்த கண்காட்சி நடைபெற்று வருவதாகவும், மாணவர்கள் அனைத்து பாடங்களிலும் தங்களுக்கு உள்ள திறமைகளை பயன்படுத்தி படைப்புகளை செய்து காட்சிப்படுத்தியுள்ளனர் எனவும்,
மதிப்பெண்களை மட்டுமே கணக்கில் கொள்ளாமல் அறிவு சார்ந்த மாணவர்களை உருவாக்க வேண்டும் என்பதை தங்கள் பள்ளியின் நோக்கமாக கொண்டு செயல்படுத்தி வருவதாகவும், மாணவர்கள் கல்லூரியில் என்ன கற்றுக்கொள்வார்களோ அதனை பள்ளி பருவத்திலேயே தாங்கள் கற்றுக் தருகிறோம் எனவும் மாணவர்களின் திறமையை பள்ளியிலேயே வெளிக் கொண்டு வருவதற்கு இது போன்ற கண்காட்சிகள் ஊந்துகோளாக அமையும் என தெரிவித்தார்..