பல்லாவரம் பெரிய ஏரிப் பகுதியில் புதிய சுற்றுச்சூழல் பூங்கா திறப்பு ! தாம்பரம் மாநகராட்சி ஆணையர் அழகு மீனா I.A.S., சுற்றுச் சூழல் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான துறையின் இயக்குனர் ராகுல் நாத் I.A.S., பூங்காவினை திறந்து வைத்தனர்!
நீண்ட நாட்களாக பாழடைந்த நிலையில் இருந்து வந்த பல்லாவரம் ரேடியல் சாலையில் அமைந்துள்ள பல்லாவரம் பெரிய ஏரி , தற்போது பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
தாம்பரம் மாநகராட்சி நிர்வாகத்தின் வேண்டுகோளிற்-
கிணங்க, பேபால் நிறுவனத்தின் சி.எஸ்.ஆர். சமூக பெருநிதியின் உதவியின் மூலம், ரூபாய் 50 லட்சம் செலவில்,
எக்ஸ்னோரா இண்டர்நேசனல் சமூக அமைப்பு , பல்லாவரம் ரேடியல் சாலையில் அமைந்துள்ள பெரிய ஏரியினை, மறுசீரமைத்து, அப்பகுதியில் , தற்போது பதிய சுற்றுச் சூழல் பூங்கா(Eco Park). உருவாக்கப்-
பட்டுள்ளது.
இச்சுற்றுப்புறச் சூழல் பூங்கா திறப்பு விழாவில், தாம்பரம் மாநகராட்சி ஆணையர் திருமதி அழகு மீனா I.A.S., அவர்களும், தமிழக அரசின் சுற்றுச் சூழல் மற்றும் காலநிலை
மாற்றத்திற்கான துறையின் இயக்குனர் ஏ.ஆர்.ராகுல்நாத் I.A.S., அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு, அச்சுற்றுச்சூழல் பூங்காவினை பொது மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில், பேபால் அமைப்பின் இயக்குநர் திருமதி. ஷீலா பாஸ்கல் அந்தோணி சேவியர், எக்ஸ்னோரா இண்டர்நேசனல் பவுண்டேசன் அமைப்பின் தலைவர் செந்தூர் பாரி, பொருளாளர் சுப்பிரமணியன், எக்ஸ்னோரா மக்கள் தொடர்பு அலுவலர் டாக்டர் ஆவின் கி. கோபிநாத், எக்ஸ்னோரா அமைப்பின் அறங்காவலர்கள் முனவர்தீண், மோகன சுந்தரம், திட்டப் பொது மேலாளர் நடராஜன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று சிறப்பித்தனர்.
இச்சுற்றுச் சூழல்
பூங்காவில், நடைபயிற்சி மேற்கொள்வதற்கான நடைபாதையும், சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்களும், பெரியவர்களுக்கான உடற்பயிற்சி சாதனங்களும் நிறுவப்பட்டுள்ளது.
மேலும், இரவு நேரங்களில் பொது மக்கள் பாதுகாப்பிற்காக பதிய சூரிய மின் விளக்குக்களும் அவ்விடத்தில் அமைக்கப்பட்டுள்ளது