சென்னை, அக்டோபர் 2024: ஏர் இந்தியா குழுமம் [Air India Grou], ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் லிமிடெட் மற்றும் ஏஐஎக்ஸ் கனெக்ட் பிரைவேட் லிமிடெட் [AIX Connect Pvt Ltd](முன்பு ஏர்ஏசியா இந்தியா [AirAsia India] என்று அழைக்கப்பட்டது) ஆகிய இரு நிறுவனங்களின் செயல்பாட்டு நடவடிக்கைகளின் ஒருங்கிணைப்பு மற்றும் சட்டப்பூர்வமாக ஒரே நிறுவனமாக்கும் இணைப்பு முயற்சிகளால், குறைந்த கட்டணத்தில் உயர்தர விமான சேவையை அளிக்கும் மிகப்பெரும் நிறுவனமாக முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.
ஒரே நிறுவனமாக்கும் வகையில் அமைந்திருக்கும் இந்த இரு நிறுவனங்களுக்கு இடையேயான இணைப்பு நடவடிக்கைகளுக்குப் பிறகு இந்நிறுவனம் ‘ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்’ என்ற பெயரில் தொடர்ந்து செயல்படும். மேலும் நான்கு விமான சேவை நிறுவனங்களை இரண்டு நிறுவனங்களாக ஒருங்கிணைக்கும் வகையில், ஏர் இந்திய குழுமத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாட்டு முயற்சிகளை குறிப்பிடும் வகையில், இந்நிறுவனத்தின் ஒருங்கிணைந்த ஏர்லைன் கோட் ’IX’ என்ற பெயருடன் [unified airline code IX]செயல்படும். மேலும் இக்குழுமம், விஸ்தாரா [Vistara]-வை ஏர் இந்தியாவுடன் இணைத்து உலகத்தரம் வாய்ந்த உலகளாவிய விமான சேவையை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸின் இந்த இணைப்பு நடவடிக்கையானது, அதன் புதுப்பிக்கப்பட்ட ப்ராண்ட் அறிமுகமான ஒரு வருடத்திற்குள்ளாகவே வெற்றிகரமாகமுடிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த இணைப்பு நடவடிக்கையில், செயல்பாட்டு வழிமுறைகளில் பின்பற்றப்படும் ஒரே மாதிரியான நடைமுறை, எளிதில் இணைப்பை சாத்தியமாக்கி இருக்கிறது. மேலும் ஏஒசி என்றழைக்கப்படும் ஏர் ஆபரேட்டர் சர்டிஃபிகேட்டை [Air operator certificates (AOCs).] எளிதில் மாற்ற செய்யவும் வழிவகுத்திருக்கிறது. இந்தஇணைப்பு நடவடிக்கையின் மிகவும் நுணுக்கமான அம்சங்கள் அனைத்தையும் கவனத்தில் கொண்டு, சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்துடன் (Directorate General of Civil Aviation (DGCA)) நெருக்கமாகப் பணியாற்ற வேண்டியிருந்தது. டிஜிசிஏ, இந்த நடவடிக்கை ஆரம்பம் முதல் வெற்றிகரமாக நிறைவேறும் வரை ஆதரவளித்ததோடு, முழுமையாக மேற்பார்வை செய்திருக்கிறது. இந்த இணைப்பு நடவடிக்கைக்கு சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் (Ministry of Civil Aviation (MOCA)), சிவில் விமானப் பாதுகாப்புப் பணியகம் (Bureau of Civil Aviation Security (BCAS)) மற்றும் பிற முக்கிய பங்குதாரர்களிடமிருந்தும் பெரும் ஆதரவு கிடைத்தது.
திரு. விக்ரம் தேவ் தத், டைரக்டர் ஜெனரல் – டிஜிசிஏ [Vikram Dev Dutt, Director General, DGCA] கூறுகையில்: “ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்துடன் ஏஐஎக்ஸ் கனெக்ட் வெற்றிகரமாக ஒருங்கிணைக்கப்பட்டு, முழுமையாகஇணைக்கப்பட்டிருப்பது பெரும் பாராட்டுக்குரியது மட்டுமில்லாமல விமான நிறுவனங்களின் இணைப்புகளுக்கு ஒருமுன்னுதாரணமாக அமைந்திருக்கிறது. உலகின் மூன்றாவது பெரிய விமானச் சந்தையாக மிக துரிதமாக வளர்ச்சிக்கண்டு வரும் இந்தியாவின் அபார வளர்ச்சியானது, இங்கு மிகவும்வலுவான, ஒழுங்குமுறை நடவடிக்கைகளுக்கான அத்தியாவசியத்தை வெளிக்காட்டியிருக்கிறது. அதனால் இதில் உள்ள நுட்பமான அம்சங்களைப் பின்பற்றி ஒரு மைல்கல்லை நிறைவேற்றுவது என்பது,, டிஜிசிஏ மற்றும் விமான சேவை நிறுவனம் ஆகிய இரு குழுவினர்களுக்கு இடையே மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளுக்கு நற்சான்றாக அமைந்திருக்கிறது.’’என்றார்.
செவ்வாயன்று, டிஜிசிஏவின் இயக்குநர் ஜெனரல் விக்ரம் தேவ் தத், ஏர் இந்தியாவின் தலைமைச் செயல் அதிகாரியும், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தலைவருமான கேம்ப்பெல் வில்சன் முன்னிலையில், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸின் நிர்வாக இயக்குநர் அலோக் சிங்கிடம் புதுப்பிக்கப்பட்ட ஏஓசியை வழங்கினார். புதுதில்லியில் உள்ள DGCA தலைமையகம்.
நிறுவன ஒருங்கிணைப்பு செயல்முறையில் உண்டாகும்முன்னேற்றங்களைத் தொடர்ந்து கண்காணிப்பதற்காக ஒரு பிரத்தியேக குழுவுடன், டிஜிசிஏ-வின் விமான தரநிலை இயக்குநரகத்தால் [Flight Standards Directorate]உருவாக்கப்பட்ட ஒரு நேரடி கண்காணிப்பு அம்சமும் [live tracke] உருவாக்கப்பட்டதால், பெரும் சவாலான பணியை காலக்கெடுவுக்குள் வெற்றிகரமாக நிறைவேற்ற முடிந்திருக்கிறது.
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிர்வாக இயக்குனர் திரு. அலோக் சிங் [Aloke Singh, Managing Director, Air India Exp] இந்த இணைப்பு நடவடிக்கை பற்றி கூறுகையில், “சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு, நாங்கள் ஏஐஎக்ஸ் கனெக்ட் மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகிய இரு நிறுவனங்களின்ஒருங்கிணைப்பை தொடங்கினோம். இரண்டு நிறுவனங்களையும் ஒரு பொதுவான பிராண்டின் பின்னால் கொண்டு வரும் நோக்கத்துடன் இந்த முயற்சியை மேற்கொண்டோம். மறுபக்கம், இரு நிறுவனங்களின் செயல்பாட்டு நடவடிக்கை மற்றும் சட்டரீதியான இணைப்பு ஆகியவற்றில் இன்று இருக்கும் மிகவும் சிக்கலான ஒருங்கிணைப்பு செயல்முறைகளுக்கான முயற்சியில் நாங்கள் தொடர்ந்து பணியாற்றினோம். DGCA, BCAS, மற்றும்மத்திய விமானத் துறை அமைச்சகம், ஏஐஎக்ஸ் மற்றும் குழும நிர்வாகிகள் குழுக்கள் மற்றும் பல சக ஊழியர்களின் நெருக்கமான ஒத்துழைப்பு, இந்த இணைப்பு நடவடிக்கைவெற்றிகரமான நிறைவேற முக்கிய பங்கு வகித்திருக்கிறது.’’ என்றார்.
ஏர் இந்தியாவின் நிர்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியும், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தலைவருமான திரு.கேம்ப்பெல் வில்சன் [Campbell Wilson, Managing Director & Chief Executive Officer of Air India and Chairman, Air India Express,] கூறுகையில், “ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் உடன் ஏஐஎக்ஸ் இணைப்பை ஒருங்கிணைப்பது என்பது ஏர் இந்தியாவின் விஹான்.ஏஐ [Vihaan.ai]-யின் புரட்சிகரமான மாற்றத்திற்கான பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்திருக்கிறது. ஒன்றாக இணைக்கப்பட்டிருக்கும்நிறுவனம், இந்தியா மற்றும் அதன் பிராந்திய பகுதிகளில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் விமானப் பயணத்திற்கான தேவைகளைப் பூர்த்தி செய்யும். அதிலும் குறிப்பாக புதிய மற்றும் மிகவும் கவர்ச்சிகரமான, பெரும் மதிப்புமிக்க தயாரிப்புகளைத் தேடுவதில் ஆர்வம் காட்டிவரும் இளைய தலைமுறையினரிடையே வரவேற்பைப் பெறும். இந்த இணைப்பைத் தொடர்ந்து விஸ்தாரா நிறுவனம் [Vistara] ஏர் இந்தியாவுடன் நவம்பர் 12-ம் தேதி இணைக்கப்படும். அதை தடையின்றி முடிக்க டிஜிசிஏவின் வழிகாட்டுதலுடன் செயல்பட நாங்கள் எதிர்நோக்கி காத்திருக்கிறோம்’’ என்றார்.
இரு நிறுவன இணைப்பு நடவடிக்கை முழுவதுமாகநிறைவடைந்தவுடன், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் எதிர்கால வளர்ச்சி மற்றும் அடுத்தகட்ட மேம்பாட்டுக்கான திட்டங்களில்கவனம் செலுத்தும். இந்நிறுவனத்தில் விமான சேவையில் இருக்கும் விமானங்களின் எண்ணிக்கை தற்போது 88விமானங்களாக அதிகரித்துள்ளது. மேலும், ஒவ்வொரு மாதமும் கிட்டத்தட்ட நான்கு புதிய விமானங்கள் தொடர்ந்து இணைக்கப்பட்டு வருகின்றன. இந்தியா, வளைகுடா நாடுகள்மற்றும் தென்கிழக்கு ஆசியா முழுவதும் தனது செயல்பாடுகளை விரிவுப்படுத்தும் வகையில், நடப்பு நிதியாண்டின் இறுதிக்குள்விமான சேவையில் ஈடுபடும் விமானங்களின் எண்ணிக்கை 100-ஐ கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏஐஎக்ஸ் இயக்கும் விமான வழித்தடங்களின் எண்ணிக்கை 74ல் இருந்து 171 ஆக உயர்ந்துள்ளது, மேலும் 2022-ம் ஆண்டின் தொடக்கத்தில் டாடா குழுமம் ஏர் இந்தியாவை கையகப்படுத்தியதில் இருந்து பயணிகள் எண்ணிக்கை 400%அதிகரித்துள்ளது.
அக்டோபர் 2023-ல், ’ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்’ என்ற ஒருங்கிணைந்த பிராண்டை இந்த விமான சேவை நிறுவனம் வெளியிட்டது. அன்று முதல், ஏஐஎக்ஸ் கனெக்ட் மூலம் இயக்கப்படும் விமானங்களும் அவசியமான ஒழுங்குமுறை ஒப்புதலுடன் ‘ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்’ பிராண்டின் கீழ் சந்தைப்படுத்தப்பட்டுள்ளன.