சென்னையை அடுத்த வண்டலூரில் நூற்றாண்டுகளுக்கு மேல் பழமையான ஸ்ரீ சீனிவாச பெருமாள் ஸ்ரீ வீர பட்டீஸ்வரர் ஆலயத்தில் நூறாம் ஆண்டு புரட்டாசி மாத விழாவினை முன்னிட்டு திருக்கல்யாண உற்சவம் ஆலய வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது…
தொடர்ந்து 13 வது ஆண்டாக நடைபெற்று வரும் இந்த திருக்கல்யாண உற்சவத்தில் வண்டலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சார்ந்த ஏராளமான பொதுமக்கள் ஸ்ரீதேவி ஸ்ரீ பூதேவி சமேத ஸ்ரீ சீனிவாச பெருமாள் திருக்கல்யாண உற்சவத்தில் பங்கேற்று ஸ்ரீ சீனிவாச பெருமாளின் அருளைப் பெற்றுச் சென்றனர்…
பின்னர் ஆலயத்துக்கு வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் ஆலய விழா குழுவினர் சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது…
மேலும் இந்த புரட்டாசி மாத மூன்றாவது வார திருக்கல்யாண உற்சவத்தில் ஆலய விழா குழுவின் நிர்வாகிகள் ஜானகிராமன் புண்ணியகோடி பாபு ஜெயராமன் சேகர் சத்யநாராயணன் யுவராஜ் வினோத் குமார் பிரேம்குமார் மற்றும் ஆலயத்தின் பூஜை ஸ்தாபகர் சாமிநாத சாஸ்திரிகள் உள்ளிட்ட ஆலயத்தின் முக்கிய நிர்வாகிகள் ஊர் பெரியவர்கள்,ஆலய உபயோதாரர்கள், வண்டலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தை சார்ந்த பக்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்…