சென்னை, நவம்பர் 2024: ஹரியானா மாநிலத்தின் சோனிபட் நகரில் அமைந்துள்ள ஜிண்டால் குளோபல் பல்கலைக்கழக (JGU) வளாகத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள இந்தியாவின் முதல் அரசமைப்பு அருங்காட்சியகம் மற்றும் உரிமைகள் மற்றும் சுதந்திரங்களுக்கான அகாடமிக்காக ஒரு புதுமையான பாதியளவு மனித உருவம் கொண்ட ரோபோ வடிவமைக்கப்பட உள்ளது. அருங்காட்சியக வருகையாளர்களுக்கான மற்றும் இன்டராக்டிவ் டிஸ்பிளேக்களுக்கான ஸ்மார்ட் அசிஸ்டன்ட் (S.A.M.V.I.D) உருவாக்கத்தின் மீது ஒத்துழைப்பதற்கு ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஐஐடி மெட்ராஸ் (IITM) மற்றும் ஓபி ஜிண்டால் குளோபல் யுனிவர்சிட்டி (JGU), கையெழுத்திட்டிருக்கின்றன. இந்தியாவில் அரசமைப்பு சட்டம் உருவாக்கி ஏற்கப்பட்டு, 75 ஆண்டுகள் நிறைவடைவதை கொண்டாடுவதே இந்த முன்னெடுப்பின் நோக்கமாகும். மேம்பட்ட தொழில்நுட்பத்தின் வழியாக அருங்காட்சியகத்திற்கு வருகை தரும் நபர்களின் ஈடுபாட்டை மேம்படுத்துவதற்காக ஒரு தனித்துவமான ரோபோவை உருவாக்குவதற்கான புத்தாக்க முயற்சியாக இது இருக்கும்.
அரசமைப்பு அருங்காட்சியகம், உரிமைகள் மற்றும் சுதந்திரங்களுக்கான அகாடமி என்பது, ஒரு நிகரற்ற முன்னெடுப்பாகும். இந்திய அரசமைப்பு வரலாற்றின் ஏடுகளில் பொறிக்கப்படுகின்ற ஒரு சிறப்பான அமைவிடமாக இது திகழும். இந்திய அரசமைப்பு சட்டம் இயற்றப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைவதை கொண்டாடும் விதத்தில் 2024 நவம்பர் 26-ம்தேதியன்று இந்த அருங்காட்சியகம் தொடங்கி வைக்கப்படும் மற்றும் தேசத்திற்கு அர்ப்பணிக்கப்படும்.
இந்த இலக்கிற்காக நவீன தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் இன்டராக்டிவ் அனுபவங்கள், 3-D அமைப்புகள் மற்றும் முற்போக்கான டிஸ்பிளேக்கள் ஆகியவை இந்த புதுமையான அருங்காட்சியகத்தின் முக்கிய அம்சங்களாக இருக்கும். இந்தியாவில் எந்தவொருகல்வி நிலையத்திலும் முதன் முறையாக நிறுவப்படும்அருங்காட்சியகம் என்ற பெருமையை இதுபெறுகிறது. ஓபி ஜிண்டால் குளோபல் பல்கலைக்கும் மற்றும் ஐஐடி மெட்ராஸ் – ன் தொழில்நுட்ப நிபுணத்துவத்திற்கானமையத்திற்குமிடையே மேற்கொள்ளப்படும் இந்த ஒத்துழைப்பு, ஒரு குடியரசாக இந்தியாவை நிலைநாட்டியிருக்கும் மிக முக்கியமான ஆவணமானஅரசமைப்பு சட்டத்தை கொண்டாடுகின்ற ஒரு புதிய அனுபவத்தை உயிரோட்டத்துடன் இது வழங்கும்.
வருகையாளர்களின் அனுபவங்களை இன்டராக்டிவாகமாற்றுகின்ற மற்றும் காட்சிப்பொருட்கள் மீது விரிவான தகவலையும், வழிகாட்டப்படும் சுட்டிக்காட்டல்களையும்வழங்குகின்ற மேம்பட்ட மொழி மாடல்களை(S.A.M.V.I.D) செயல்திட்டம் பயன்படுத்தும்; அரசமைப்பு சட்டத்திற்கு முக்கியமான பங்களிப்புகளை செய்த ஆளுமைகள் மற்றும் அரசியலமைப்பு சபையின் அனைத்து உறுப்பினர்களதுவிவரக்குறிப்புகளும் பார்வையாளர்களுக்கு வழங்கப்படும். தொழில்நுட்பத்தை கல்வி மற்றும் கலாச்சார அனுபவங்களோடு ஒருங்கிணைக்கும் திட்டத்தில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்ற நடவடிக்கையாக இந்த ஒத்துழைப்பு இருக்கும்.
அரசமைப்பு சட்டத்தின் பல்வேறு பிரிவுகள் மீதான புரிந்துகொள்ளலை செழுமையாக்கவும், அவைகளின் முக்கியத்துவத்தை முன்னிலைப்படுத்தவும் அதன் உருவாக்கத்திற்கு வடிவமைப்பு தந்த வரலாற்று சிறப்பு மிக்க விவாதங்கள் பற்றி எடுத்துரைக்கவும் இந்தியாவின் முதல் அரசமைப்பு சட்ட அருங்காட்சியகத்தை ஜிண்டால் குளோபல் பல்கலை நிறுவுகிறது. கடந்த 75 ஆண்டுகளாக நம் நாட்டின் அரசமைப்பு சட்டம் கடந்து வந்த பாதையை எடுத்துக்காட்ட ஆர்வமூட்டும் சாதனங்கள், காட்சிப்பொருட்கள் மற்றும் இன்டராக்டிவ் டிஸ்பிளேக்களை இந்த அருங்காட்சியகம் கொண்டிருக்கும். நமது அரசமைப்பு சட்டத்தின் ஒவ்வொரு பிரிவு மற்றும் அவைகளின் முக்கியத்துவத்தை விளங்கிக்கொள்ள ஒரு சிறந்த அமைவிடமாக இது இருக்கும். வாசகம், ஒளி ஒளி காட்சி மற்றும் அனுபவம் என பல வடிவங்களின் வழியாக அரசமைப்பு சட்டம், அதன் உருவாக்கம் மற்றும் அதன் பல்வேறு கூறுகள் மீது வருகையாளர்களின் ஆர்வத்தை இந்த அருங்காட்சியகம் தூண்டிவிடும்.
மிகப்பெரிய ஈர்ப்பு அம்சமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படும் இந்த மியூசியத்தில் இடம்பெற்றுள்ள கலைப்பொருட்களுள், கையால் எழுதப்பட்ட ஆவணங்களையும் மற்றும் அரசமைப்பு சட்டத்தால் உத்வேகம் பெற்று உருவாக்கப்பட்ட கலைப்படைப்புகளையும் உள்ளடக்கும்.
ஐஐடி மெட்ராஸ் உடனான JGU – ன் கூட்டாண்மையானது, கடந்தகால வரலாற்றை உயிரோட்டமுள்ளதாக கொண்டு வருகின்ற ஒரு அருங்காட்சியகத்தை உருவாக்கும் குறிக்கோளோடு சமீபத்திய வடிவமைப்பு, ரோபோக்களின் பயன்பாடு, மிகச்சிறப்பான வன்பொருள் சாதனங்கள் மற்றும் புதிய தொழில்நுட்பத்தின் பயன்பாடு ஆகியவற்றை ஐஐடி மெட்ராஸ் வழங்கும்.