டாக்டர் புலவர் பாண்டியன் அவர்கள் எழுதிய “ஹோமியோபதி என்னும் குணமாக்கும் கலை” என்ற தலைப்பிலான மருத்துவ நூல் வெளியீட்டு விழா சென்னை பொழிச்சலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது..
அனகாபுத்தூர் திருவள்ளுவர் வள்ளலார் நற்பணி மன்றத்தில் நிறுவனர், புலவர் ஆறுமுகம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த மருத்துவ நூல் வெளியீட்டு விழாவில், அருள்முருகன் டவர்ஸ் திருமண மண்டபத்தின் உரிமையாளர் அருள் முருகன் ராமமூர்த்தி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நூலினை வெளியிட ,அதனை தமிழ் எழுத்தாளர்கள் சங்கத்தின் தேசிய தலைவரும், வனிதா பதிப்பகத்தின் உரிமையாளருமான பெரியண்ணன் அவர்கள் பெற்றுக் கொண்டு சிறப்புரையாற்றினார்…
குரோம்பேட்டை திருக்கோவில் பேரவையின் நிறுவனத் தலைவர் இளங்கோவன், முன்னாள் முதன்மை கல்வி அலுவலர் மணி, முன்னாள் மாவட்ட துணை ஆட்சியர் ராமபரஞ்சோதி, முன்னாள் மாவட்ட கல்வி அலுவலர் புலவர் சுப்பு லட்சுமணன், பாதுகாப்பு துறையின் முன்னாள் கூடுதல் இயக்குனர் சங்கரன் மதிவாணன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டு வெளியிடப்பட்ட நூலுக்கு தங்களின் அணிதுரையை வழங்கினர்…
மேலும் இந்த நூல் வெளியீட்டு விழாவில் ஸ்ரீ ராமகான பஜனை சபா ராமகிருஷ்ணன், முன்னாள் தலைமை ஆசிரியை புலவர் பத்மா முத்துகிருஷ்ணன், தென் சென்னை மாவட்ட ஓய்வூதியர் ஆசிரியர் சங்கத்தின் துணைத் தலைவர் ஜெயராமன், காவல்துறை ஆணையரகம் லீலா ஸ்ரீ, குன்றத்தூர் ராம ராகவேந்திரன், நூலின் பதிப்பாசிரியர் கவிஞர் வசந்த நாயகன், பம்மல் இலக்கிய மன்றத்தின் தலைவர் கோவி பழனி, திருவள்ளுவர் வள்ளலார் நற்பணி மன்றத்தின் தலைவர் ஆரோக்கிய ஜெய சாமி, தமிழ்நாடு அரசு ஓய்வு பெற்ற ஊழியர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் செல்வராஜ் தமிழ்நாடு அரசு ஓய்வு பெற்ற ஊழியர் ஆசிரியர் சங்கத்தின் செயலாளரும் முன்னாள் காவல் உதவி ஆய்வாளருமான செல்வராஜ், குரோம்பேட்டை திருக்குறள் பேரவை, பம்மல் இலக்கிய மன்றம், அனகாபுத்தூர் திருவள்ளுவர் வள்ளலார் நற்பணி மன்றம், பம்மல் கிளையின் தமிழ்நாடு அரசு ஓய்வு பெற்ற ஊழியர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்…