” வெராண்டா ” நர்சிங் துறையில் வேலை வாய்ப்பை உருவாக்க நார்வே நிறுவனத்துடன் ஒப்பந்தம்.

சென்னை, ஜன- 31,
வெராண்டா பயிற்சி நிறுவனம் நர்சிங் துறையில் வேலை வாய்ப்பை உருவாக்க நார்வே நிறுவனத்துடன் இணைந்து கூட்டு முயற்சியில் செயல்பட முடிவெடுத்துள்ளது.

புகழ் பெற்ற நார்வே சுகாதார நிறுவனங்களில் ஒன்றான ” நர்சிங் ஐரோப்பா ஏ.எஸ் ” ஐரோப்பிய நாடுகள் முழுவதும் உள்ள சுகாதார வழங்குநர்களுக்கு முழுமையாக ஐரோப்பிய ஒன்றியத்தின் தகுதி பெற்ற மற்றும் உரிமம் பெற்ற செவிலியர்களை வழங்குவதில் நிபுணத்துவம் பெற்றது.

இந்த வேலைவாய்ப்பு மூலம் ரூ. 200 கோடி வருவாயை பெறும்.

இந்த பார்ட்னர்ஷிப் மூலம், வெராண்டா இந்தியாவைச் சேர்ந்த 2000 க்கும் மேற்பட்ட செவிலியர்கள் வேலைவாய்ப்பை பெறுவார்கள்.

இதன் மூலம் செவிலியர்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் எங்கும் பணிபுரிய உரிமங்களுடன் முழுமையாக ஐரோப்பிய ஒன்றியத்தின் தகுதி பெற்ற செவிலியர்களாக மாற முடியும்.

ஐரோப்பாவின் சுகாதாரப் பணியாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்தல்
ஐரோப்பாவில் சுகாதார நிபுணர்களின் கடுமையான பற்றாக்குறை நிலவுகிறது. உலக சுகாதார நிறுவனம் 2030 ஆம் ஆண்டுக்குள் 13 மில்லியன் சுகாதாரப் பணியாளர்கள் பற்றாக்குறை ஏற்படும் என்று கணித்துள்ளது.இந்தப் பற்றாக்குறை இந்திய செவிலியர்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்குகிறது.

தலைமை செயல் அதிகாரி ஆதித்யா மாலிக் கூறியதாவது:- “ஆட்சேர்ப்பு மற்றும் பணியாளர்களை நியமிப்பதில் நிரூபிக்கப்பட்ட நிபுணத்துவத்தைக் கொண்ட நர்சிங் ஐரோப்பாவுடன் கூட்டு சேருவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த பார்ட்னர்ஷிப் இந்திய செவிலியர்களுக்கும் ஐரோப்பிய சுகாதாரப் பராமரிப்புக்கும் ஒரு வெற்றியாக இருக்கும். வெராண்டாவில், உலகளாவிய பணியாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வது மட்டுமல்லாமல், இந்தியாவை உலகத் தரம் வாய்ந்த திறன் மேம்பாட்டு மையமாக நிலைநிறுத்தவும், சர்வதேச தரங்களை பூர்த்தி செய்யவும், உலகளவில் அர்த்தமுள்ள தாக்கத்தை ஏற்படுத்தவும் எங்கள் நிபுணர்களை மேம்படுத்தவும் நாங்கள் முயற்சி செய்கிறோம்” என்றார்

Chennai