கூடுவாஞ்சேரி மாடம்பாக்கம் செல்லும் வழியில் மாடம்பாக்கத்தில் புதிதாக மழலையர்களுக்கான நீலன் குளோபல் ப்ரீகே பள்ளி இன்று துவக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு பள்ளியின் நிர்வாக இயக்குனர் திருமதி. வசந்தா நீலன் தலைமை தாங்கினார். இதில் பள்ளியின் CEO திருமதி.தேவிகா அரசு, மற்றும் இயக்குனர் மோனிஷா சுரேன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக விஜய் டிவி புகழ் பாக்கியலட்சுமி திருமதி. சுசித்ரா அவர்கள் கலந்து கொண்டு நீலன் குளோபல் ப்ரீகே பள்ளியினை குத்துவிளக்கு ஏற்றி, ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். பின்னர் சிறப்பு விருந்தினருக்கு பள்ளியின் நிர்வாகிகள் பூங்கொத்து கொடுத்து பொன்னாடை அணிவித்து மரியாதை செய்தனர். பின்னர் அங்கிருந்த வகுப்பறைகளை பார்வையிட்டனர். குழந்தைகளுக்கு ஏற்றவாறு இங்கு டிஜிட்டல் முறையில் அதிநவீன வசதிகள் மற்றும் விளையாட்டு அடிப்படையிலான கற்றல் உணர்வு, சுகாதாரம் மற்றும் தரமான பராமரிப்புடன் கூடிய வசதிகள் மற்றும் 24மணி நேரமும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டும் தொலைபேசி மற்றும் போக்குவரத்து சேவை செய்யப்பட்டு உள்ளது என்றும் தெரிவித்தனர். இதில் பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் மாடம்பாக்கம், கூடுவாஞ்சேரி, பகுதிகளைச் சேர்ந்த அரசியல் கட்சித் தலைவர்கள் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.