சென்னைகே.கே.நகரில் த.நா.வீ.வ.வாமூலம்கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு திறப்பு

சென்னை,பிப்.27- சென்னை மாவட்டம் கே.கே.நகரில் தமிழ்நாடு அரசு வீட்டு வசதி மற்றும்நகர்ப்புற வளர்ச்சித்துறை தமிழ்நாடு வீட்டு வசதிவாரியத்தின் மூலம் சொந்த வீடு கட்டும் திட்டத்தின்கீழ் ரூ.51கோடியே 39லட்சத்தில் கட்டப்பட்ட120 அடுக்குமாடி குடியிருப்புகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமைச்செயலகத்தில் காணொளிவாயிலாக திறந்துவைத்தார். உடன் வீட்டுவசதி மற்றும் நகர்புறவளர்ச்சிதுறை அமைச்சர்க. முத்துசாமி, தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை கூடுதல் தலைமைசெயலாளர் திருமதி.காகர்லா உஷா,தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் தலைவர் எஸ்.பூச்சிமுருகன், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் மேலாண்மை இயக்குனர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் இருந்தனர், அப்போது கே.கே.நகரில்கட்டப்பட்ட புதிய குடியிருப்பு திறப்பு விழாவில் தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர்ர தமிழச்சி தங்கபாண்டியன், விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.வி.பிரபாகர்ராஜா, 136வது மாமன்ற உறுப்பினர் நிலவேணி துரைராஜ் மற்றும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய கே.கே.நகர்அலுவலகத்தின் உதவி பொறியாளர்நித்யா,மேற்பார்வை பொறியாளர் ராமகிருஷ்ணன், உதவி செயற்பொறியாளர் கிருஷ்ணகுமார் மற்றும் பயனாளிகள் இருந்தனர்.

Political