சென்னை ஈக்காட்டுத்தாங்கல் காந்தி நகரில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ கெங்கை அம்மன்,ஸ்ரீ சொர்ணாம்பிகை சமூக, ஸ்ரீ சொர்ணாபுரீஸ்வரர் ஸ்வாமி, ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாச பெருமாள் மற்றும் பரிவாரங்களுக்கு கும்பாபிஷேகம் விழா சிறப்பாக நடைபெற்றது …
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர்….
முன்னதாக ஆலயத்தில் கணபதி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகளுடன் நான்கு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது, பின்னர் மகா பூர்ணாஹூதி,யாத்ரா தானம் மேற்கொள்ளப்பட்டு சிவாச்சாரியார்கள் வேதங்கள் முழங்க, கலசங்களில் புனித நீர் எடுத்துச் செல்லப்பட்டு, கோபுர கலசங்கள் மீது புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்ற்றது,
பின்னர் கெங்கையம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டு, ஆலயத்திற்க்கு வந்திருந்த பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டு மகா தீப ஆராதனை காட்டப்பட்டது…
இதில் ஈகாட்டுத்தாங்கல் காந்திநகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சார்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டு ஸ்ரீ கெங்கையம்மனின் அருளினை பெற்று சென்றனர்…
பின்னர் ஆலயத்திற்கு வந்திருந்த 2000க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அண்ணாமலையார் அன்னதான குழுவினர் சார்பாக அருஞ்சுவை உணவு அன்னதானம் வழங்கப்பட்டது…
மேலும் இந்த கும்பாபிஷேக விழாவில் ஆலயத்தின் தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் ஸ்ரீ கெங்கை அம்மன் நிர்வாகிகள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள்,ஆலய உபயதாரர்கள், அரசியல் பிரமுகர்கள், ஈக்காட்டுத்தாங்கல் காந்திநகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சார்ந்த பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்…