ஸ்ரீ சுந்தரமூர்த்தி சுவாமிகள் ஆடி சுவாதி குருபூஜை விழா ஆதிசைவ சிவாச்சாரியார்கள் கூட்டமைப்பின் சார்பாக

ஆதிசைவ சிவாச்சாரியார்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைந்த சென்னை மாவட்டம் சார்பாக ஸ்ரீ சுந்தரமூர்த்தி சுவாமிகள் ஆடி சுவாதி குருபூஜை விழா சென்னை குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது…

ஆதிசைவ சிவாச்சாரியார்கள் கூட்டமைப்பின் தேசிய தலைவர்
சாம்பமூர்த்தி சிவாச்சாரியார் தலைமையில் நடைபெற்ற இந்த குருபூஜை விழாவில்
சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் இன்ஸ்பெக்டர் ஜெனரல் பொன் மாணிக்கவேல் மற்றும்உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் வள்ளியப்பன், சங்கத்தின் தேசிய பொருளாளரும் வழக்கறிஞருமான டாக்டர் ஐயப்பன் சர்மா ஆகியோர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்…

சங்கத்தின் அகில உலக செயலாளர் கலிபோர்னியா சுவாமிநாதன் அவர்கள் காணொளி வாயிலாக கலந்து கொண்டு வாழ்த்துரையாற்றினார்.

மேலும் அகில உலகத் பொருளாளர் குரு கண்ணன்,தமிழ் மாநிலத் தலைவர் பாலசுப்பிரமணிய சிவம், தமிழ் மாநிலச் செயலாளர் உமாகாந்த் சிவாச்சாரியார், ஒருங்கிணைந்த சென்னை மாவட்ட தலைவர் சந்திரமௌலி சிவாச்சாரியார், சென்னை மாவட்ட செயலாளர் பில்வநாத் சிவாச்சாரியார், பொருளாளர் நாகராஜ சிவாச்சாரியார், தென் சென்னை மாவட்ட தலைவர் பொன்னுசாமி சிவாச்சாரியார், ஆனந்த் சிவாச்சாரியார், சுரேஷ் சிவாச்சாரியார் உள்ளிட்ட ஏராளமான ஆதிசைவ சிவாச்சாரியார்கள் குடும்பங்கள் கலந்து கொண்டனர்…

மேலும் இந்த விழாவில் சுந்தரமூர்த்தி நாயனார்க்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் மேற்கொள்ளப்பட்டு, சுந்தரமூர்த்தி நாயனாரின் வாழ்க்கை தத்துவங்களும் குறித்தும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது…

இதில் குரோம்பேட்டை பல்லாவரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சார்ந்த பலர் கலந்து கொண்டனர்…

Chennai