உலக அளவில் தொழிற்சாலைகளில் பாதுகாப்பு அம்சங்களில் இந்தியாவும் தலைசிறந்து விளங்குவதாக தொழிற்சாலைகள் பாதுகாப்பு ஆலோசனை நிர்வாகத்தின் ஓய்வு பெற்ற இயக்குனர் ஜி எம் இ கே ராஜ் தெரிவித்துள்ளார்…
உலக பாதுகாப்பு அமைப்பின் சார்பாக 5ஆம் ஆண்டு தொழில்முறை மேம்பாட்டு கருத்தரங்கம் மற்றும் தொழில்சார் ஆரோக்கியம்,பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் 2024 ஆம் ஆண்டிற்கான விருதுகள் வழங்கும் விழா, சென்னை மணப்பாக்கத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது…
உலக பாதுகாப்பு அமைப்பின் இந்திய தலைவரும் இயக்குனருமான கண்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த விருதுகள் வழங்கும் விழாவில் சிறப்பு விருந்தினராக தொழிற்சாலைகள் பாதுகாப்பு ஆலோசனை நிர்வாகத்தின் ஓய்வு பெற்ற இயக்குனர், ஜி.எம்.இ.கே.ராஜ் கலந்து கொண்டு இந்தியாவின் 21 மாநிலங்களை சார்ந்த 300க்கும் மேற்பட்ட தொழில்சார் பாதுகாப்பு துறையில் சிறப்பாக செயலாற்றிய 185 நிறுவனங்களுக்கு சிறப்பு தொழில்சார்,ஆரோக்கியம்,பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் 2024 ஆம் ஆண்டிற்கான விருதுகளை வழங்கி பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழலில் அதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி சிறப்புரையாற்றினார்.
மேலும் இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வில் பேரீஸ் குழுமத்தின் நிறுவனரும் தலைவருமான சையத் முகமது பேரீஸ்,,நான்வின் எனர்ஜி எல்.எல்.பியின் நிர்வாக இயக்குனர் நந்தகுமார், ஓய்வு பெற்ற ஐ ஆர் எஸ் இ விக்னவேலு
உள்ளிட்ட உலக பாதுகாப்பு அமைப்பு இந்தியா தேசிய குழுவின் முக்கிய உறுப்பினரகள் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்…
நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய உலக பாதுகாப்பு அமைப்பின் இந்திய தலைவர் கண்ணன் கூறுகையில்,
இந்தியா முழுவதும் உள்ள 21 மாநிலங்களில் இருந்து பல்வேறு தொழில்துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 300 க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் தீவிரமாக பங்கு வகித்து அந்தந்த களங்களில் பாதுகாப்பில் சிறந்து விளங்குவதற்கு உறுதிபூண்டுள்ள தொழில் வல்லுநர்களின் ஒருங்கிணைப்போடு சிறப்பாக நடைபெற்றது எனவும்
உலக பாதுகாப்பு அமைப்பின் மிக முக்கிய நோக்கமாக தொழிற்சாலைகள் நிறுவனங்களில் செயல்படும் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கி பாதுகாப்பில் சிறப்பாக செயல்பட்ட 185 தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டதாகவும், உலக பாதுகாப்பு அமைப்பின் சார்பாக வழங்கப்படும் இந்த விருதுகள்,தொழிற்சாலைகள் மற்றும் தொழில்துறையின் பெரிய நிறுவனங்களுக்கு மட்டுமல்லாமல் சிறு குறு தொழில்களில் ஈடுபட்டு வரும் நிறுவனங்களையும், ஊக்குவிக்கும் விதமாக 3 ஆம் ஆண்டாக தொடர்ந்து வழங்கப்படுவதாகவும்,
இது போன்ற விருதுகள் வழங்குவதின் மூலமாக வரும் காலங்களில் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு மேலும் அதிகரிக்கும் என நம்புவதாக தெரிவித்தார்…