ஸ்ரீ தர்மசாஸ்தா பஞ்சலோக திருமேனி விக்ரகம் பந்தல ராஜ ஸ்ரீ ஹரிஹர புத்திரன் ஐயப்ப சுவாமிக்கு பெயர் சூட்டு விழா

சென்னை வண்டலூர் கங்கை அம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ பம்பா வாசன் இல்லத்தில் ஸ்ரீ தர்மசாஸ்தா பஞ்சலோக திருமேனி விக்ரகம் பந்தல ராஜ ஸ்ரீ ஹரிஹர புத்திரன் ஐயப்ப சுவாமிக்கு பெயர் சூட்டு விழா நடைபெற்றது

ஸ்ரீமத் லட்சுமி நாராயணன் திருக்கோவில் அறக்கட்டளை தலைவரும் தமிழக பாரதிய ஜனதா கட்சி ஆன்மீகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளர் ரங்கசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஐயப்பா சுவாமி பெயர் சூட்டு விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக மலையாள தேசத்தின் பந்தள ராஜ அரண்மனை மகாராஜா பி. ராஜா ராஜ வர்மா ராஜா அவர்கள் முன்னிலை வகித்தார். இதில் கேரளம் தமிழ் நற்பணி மன்றம் தேசிய பொதுச் செயலாளர் உதய கண்ணன், தமிழக பாரதிய ஜனதா கட்சி ஆன்மீகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு மாநில தலைவர் நாச்சியப்பன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு ஐயப்பனுக்கு பந்தல ராஜா ஹரிஹர புத்திரன் என்று பெயர் வைத்தனர். இதில் வண்டலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமானோர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதனைத் தொடர்ந்து சபரிமலை ஐயப்பா சேவா சமாஜம் காஞ்சி கோட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ். எம். நந்தகுமார் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட சமாஜத்தின் கௌரவத் தலைவர் அருண் குருசாமி மற்றும் சமாஜத்தின் காஞ்சி கோட்ட மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு ஸ்ரீ ஐயப்ப தினசரி பூஜை என்ற புத்தகத்தை பந்தள ராஜ அரண்மனை மகாராஜா பி.ராஜா ராஜ ராஜவர்மா ராஜா வெளியிட அதன் முதல் பிரதிநிதியை ஸ்ரீமத் லட்சுமி நாராயணன் திருக்கோயில் அறக்கட்டளையின் தலைவர் ரங்கசாமி பெற்றுக்கொண்டார். இதில் சபரிமலை ஐயப்ப சேவா சமாஜம் நிர்வாகிகள் தர்ம சாஸ்தாவின் அருளையும் பந்தள ராஜாவின் ஆசிகளையும் பெற்றனர்.

பின்னர்
செய்தியாளர்களை சந்தித்து பேசிய
ஸ்ரீமத் லஷ்மி நாராயணன் திருக்கோயில் அறக்கட்டளையின் தலைவர் ரங்கசாமி விஷ்ணு சித்தர் பேசுகையில் இன்று எங்கள் இல்லத்தில் பந்தள ராஜா வம்சாவளியை சேர்ந்த பந்தள ராஜா ராஜ வர்மராஜா அவர்கள் திருக்கரங்களால் மலர் தூவி ஐயப்பனுக்கு பந்தல ராஜா ஹரிஹர புத்திரன் என்று பெயர் வைத்தார். அதனை தொடர்ந்து சிறப்பு பூஜைகளும் செய்தார். இவர் ஐயப்ப சாமி பெயர் சூட்டு விழாவில் கலந்து கொண்டது தமிழகத்திற்கும் தமிழகத்தில் உள்ள மக்களுக்கும் பெருமை சேர்க்கும் விதத்தில் உள்ளது என்றும் அதே நேரத்தில் வரும் காலத்தில் எங்கள் கோயிலில் இருந்து சீர்வரிசையாக பந்தல தேசத்திற்கு கொண்டு செல்லும் ஆபரண பெட்டிக்கு தாய் வரிசை சீதனம் கொடுக்க இருக்கிறோம் என்றும் கூறினார். இதில் சிறப்பு விருந்தினர்கள் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர்கள் மாவட்டச் செயலாளர்கள், ஐயப்ப குருசாமிகள் ஆன்மீக பக்தர்கள், ஐயப்ப பக்தர்கள், அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தமைக்கு நன்றியினை தெரிவித்து கொண்டார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு ஐயப்பன் அருளை பெற்று சென்றனர்.

Chennai