அருள்மிகு ஸ்ரீ தேவி கருமாரியம்மன் கோயிலில் 24 ஆம் ஆண்டு ஸ்ரீ விளக்கு பூஜை

சென்னை குரோம்பேட்டை நியூ காலனியில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ தேவி கருமாரியம்மன் கோயிலில் நடைபெற்ற 24 ஆம் ஆண்டு ஸ்ரீ விளக்கு பூஜையில் 1000க்கும் மேற்பட்டவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது…

முன்னதாக கோவிலில் மகா கணபதி ஹோமம் நடைபெற்று ஸ்ரீ தேவி கருமாரி அம்மனுக்கு விசேஷ அபிஷேகம் மேற்கொள்ளப்பட்டது பின்னர் ஸ்ரீ ஐயப்பன் பிரதிஷ்டை ஊர்வலம் நடைபெற்று மகா தீப ஆராதனை கட்டப்பட்டது…

பின்னர் அப்பகுதிவாழ் பொதுமக்கள் மற்றும்ஐயப்ப பக்தர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு ஸ்வஸ்திக் குழுமத்தின் உரிமையாளர் அசோக் குமார் ஜெயின் அவர்களின் ஏற்பாட்டில் அருஞ்சுவை உணவுகளுடன் அன்னதானம் வழங்கப்பட்டது…

அருள்மிகு ஸ்ரீ தேவி கருமாரியம்மன் கோவில் நிர்வாகஸ்தர் காமேஷ் ரங்கநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த திருவிளக்கு பூஜை அன்னதானம் வழங்கும் நிகழ்வில் ஸ்வஸ்திக் குழுமத்தின் உரிமையாளர் அசோக் குமார் ஜெய் அவர்கள் சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு உணவு பரிமாறி துவக்கி வைத்தார்…

மேலும் இந்த நிகழ்வின்போது குருசாமி முரளிதரன், விழா அமைப்பாளர் கிருஷ்ணன், விழா குழு நிர்வாகிகள் கதிரவன், ரமேஷ் / மணிகண்டன், பழனி, மோகன், மணிகண்டன், ஏழுமலை, மாரியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்…

Chennai