ஜீவன் எலைட் நெஸ்ட் எனும் பெயரில் புதிதாக மகளிர் தங்கும் விடுதி துவங்கம்

சென்னை ஜாபர்கான்பேட்டை கங்கை அம்மன் கோவில் தெருவில் ஜீவன் எலைட் நெஸ்ட் எனும் பெயரில் புதிதாக துவங்கப்பட்டுள்ள மகளிர் தங்கும் விடுதியினை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா துவக்கி வைத்து விடுதியினை பார்வையிட்டார்…

ஜீவன் குழுமத்தின் நிர்வாக இயக்குனர் அஜித் பிரேம் ஆனந்த் மற்றும் மருத்துவர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற இந்த புதிய மகளிர் தங்கும் விடுதியை, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்ரமராஜா அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி துவக்கி வைத்து மகளிர் தங்கும் விடுதி நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார்…

மேலும் இந்த திறப்பு விழாவில் சைதை மேற்குப் பகுதி செயலாளரும் மண்டலக்குழு தலைவருமான கிருஷ்ணமூர்த்தி, மாமன்ற உறுப்பினர் சுப்பிரமணி, வணிகர் சங்க நிர்வாகிகள் பாலன், பன்னீர்செல்வம் ,வீரபாண்டியன், ஜீவன் குழுமத்தின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தார், நண்பர்கள் மற்றும் அப்பகுதியை சார்ந்த முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்…
புதிதாக துவக்கப்பட்டுள்ள இந்த மகளிர் தங்கும் விடுதியில் பல்வேறு வசதிகளுடன் தங்கும் மகளிருக்கு சிறந்த பாதுகாப்புடன் உள்ளதாக அதன் நிர்வாகிகள் தெரிவித்தனர்….

Chennai