சென்னை குரோம்பேட்டை எம் ஐ டி கேட் அருகில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ கெங்கையம்மன் ஆலயம், ஸ்ரீ சர்வ சாஸ்தா சேவா சங்கத்துடன் இணைந்து நடத்திய பத்தாம் ஆண்டு விளக்கு பூஜை மற்றும் மலர் பூஜையில் , ஸ்வஸ்திக் குடும்பத்தின் தலைவர் அசோக் குமார் ஜெயின் அவர்களின் ஏற்பாட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு அன்னதானம் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது..
நிகழ்ச்சி அமைப்பாளர் காஞ்சிபுரம் மாவட்ட வர்த்தக அணியின் துணை அமைப்பாளர் எம் ஐ டி விஜய் தலைமையில் நடைபெற்ற இந்த மலர் பூஜை மற்றும் அன்னதானம் வழங்கும் விழாவில், ஸ்வஸ்திக் குழுமத்தின் தலைவர் அசோக் குமார் ஜெயின் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உணவு பரிமாறி அன்னதானத்தை துவக்கி வைத்தார்..
மேலும் இந்த நிகழ்வின் போது நிர்வாகிகள் பாபு காந்தி வர்மன் குருசாமிகள் குமார், பிரபா, ராம் உள்ளிட்ட கெங்கையம்மன் ஆலயம் நிர்வாகிகள், ஸ்ரீ சர்வ சாஸ்தா சேவா சங்கத்தின் நிர்வாகிகள், பல்வேறு அரசியல் கட்சிகளை சார்ந்த பிரமுகர்கள் அப்பகுதி வாழ் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்…