சென்னை மடிப்பாக்கம் கார்த்திகேயாபுரம் 13வது தெருவில் பாப்பாஸ் ஸ்போர்ட்ஸ் பயிற்சி மைதானத்தின் தொடக்க விழா நடைபெற்றது… இதில் 187 ஆவது வட்டக் கழக செயலாளர் எம் கே ஜெய் மற்றும் சென்னை பெருநகர மாநகராட்சியின் 187 வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஷெர்லி ஜெய் ஆகியோர் கலந்துகொண்டு துவக்கி வைத்தனர்..
பாப்பாஸ் ஸ்போர்ட்ஸ் பயிற்சி மைதானத்தின் நிறுவனர் லஷ்மி நரசிம்மன் தலைமையில் நடைபெற்ற இந்த புதிய பயிற்சி மைதானத்தின் துவக்க விழாவில், தி மு க வின் 187 வது வட்டக் கழக செயலாளர் எம் கே ஜெய் மற்றும் சென்னை பெருநகர மாநகராட்சியின் 187 வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஷெர்லி ஜெய் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு ரிப்பன் வெட்டியும் குத்துவிளக்கேற்றியும் துவக்கி வைத்து, அந்த பயிற்சி மையத்தின் நிறுவனர் லஷ்மி நரசிம்மன் மற்றும் அவர்களின் குடும்பத்தாருக்கு வாழ்த்து தெரிவித்து பயிற்சி பெறும் மாணவர்களிடையே உரையாற்றினர்…
இன்று புதிதாக சென்னை மடிப்பாக்கத்தில் உள்ள கார்த்திகேயாபுரத்தில் துவக்கப்பட்டுள்ள தங்களின் பயிற்சி மைதானத்தில் கிரிக்கெட் ,கால்பந்து ,சிலம்பம் ,கராத்தே உள்ளிட்ட விளையாட்டு மற்றும் தற்காப்பு கலைகள் சிறந்த பயிற்சியாளர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாகவும், மேலும் குடும்ப விழாக்கள் நடத்துவதற்கு ஏதுவாக உருவாக்கப்பட்டுள்ளதாகவும், மடிப்பாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சார்ந்த பொதுமக்கள் இதனை பயன்படுத்தி கொள்ளலாம் என, பாப்பாஸ் ஸ்போர்ட்ஸ் பயிற்சி மைதானத்தின் நிறுவனர் சார்பாக துவக்க விழா நிகழ்ச்சியின் போது தெரிவிக்கப்பட்டது…