சென்னை நங்கநல்லூரில் சிவ சாகரம் அறக்கட்டளை சார்பில் குழுத் தலைவர் சிவராமன் ஜி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி 2ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சென்னை நங்கநல்லூரில் உள்ள ஸ்ரீ சிவன் சார் யோக சபையின் மகா கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது என்றும் ஸ்ரீ சிவன் சார் ஸ்ரீ காஞ்சி மகா பெரியவரின் உடன் பிறந்த சகோதரர் என்றும் இந்த யோக சபை சனாதன தத்துவங்களில் மலர்ந்த ஒரு ஆன்மீக திருக்கோவிலாகும். இந்த புனித ஸ்தலம் பக்தர்களுக்கு ஒளி காட்டும் விளக்காக மற்றும் உள்ளொளி எழுப்பும் மணியாக பரிணமித்து அவர்களுடைய ஆன்மீக உயர்வுக்கு வழிகாட்டியாக விளங்கும் என்பதில் ஐயமில்லை என்றும் அப்பழுக்கற்ற நேர்மையே ஆன்மீகம் என்பதை குறிக்கோளாகக் கொண்ட அனைவருக்கும் இது தெய்வீகமும் ஆன்மீகமும் கமழும் இடமாக திகழும் என்று கூறினார். ஸ்ரீ சிவன் சார் ஈச்சங்குடி என்ற அழகிய கிராமத்தில் பிரம்மஸ்ரீ சுப்ரமணிய சாஸ்திரிகளுக்கும் மாதுஸ்ரீ மகாலட்சுமி அம்மையார் என்ற புனித தம்பதியினருக்கு நான்காவது மகனாக இந்து சனாதன பஞ்சாங்கப்படி குரோதியாண்டில் புரட்டாசி மாதம் புஷ்ய நட்சத்திரத்தில் 1904 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மூன்றாம் நாள் அவதரித்தார். இது புண்ணிய நதியான காவேரி தீர்த்தக்கரையில் அமைந்துள்ள சரித்திர பிரசித்தி பெற்ற கர்ஜுராபுரி என்ற திருத்தலமாகும். ஸ்ரீ சிவன் சார் அவர்களின் அவதாரம் பற்றி ஓர் பழந்தமிழ் ஓலைச்சுவடியில் எங்கும் பிரகாசமாய் இருக்கும் எல்லாம் வல்ல பகவானின் கருணையால் ஒரு ஒளி ஒளிரும் ஜோதியாக இவர் இந்த பூ உலகிற்கு வந்தார் என்பதே அவரது அவதார நோக்கமாகும். ஸ்ரீ சிவன் சார் ஸ்ரீ மகா பெரியவர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க ஸ்ரீ சிவன் சார் உலக சரித்திரங்கள் பலவற்றை உள்ளடக்கிய ஏணிப்படிகளில் மாந்தர்கள் என்ற மகத்தான தத்துவ புத்தகத்தை படைத்தார்.
ஆன்மீகத்தில் உண்மைக்கும் போலிக்கும் வித்தியாசம் தெரியாமல் தடுமாறும் இந்த கலியுகத்தில் இந்த புத்தகம் ஓர் ஆன்மீக உரைகள் வென்று கற்றறிந்தவரால் பெரிதும் போற்றப்படுகிறது என்று தெரிவித்தார். அப்படிப்பட்ட ஸ்ரீ சிவன் சார் யோக சபை உருவாக்கி அதன் கும்பாபிஷேகம் பாரத தேசத்தின் தமிழகத்தில் சென்னை நங்கநல்லூரில் பிப்ரவரி மாதம் இரண்டாம் நாள் காலை 9.20 முதல் 10 மணிக்குள் இந்த கும்பாபிஷேகம் நடைபெறும் என்பதை இந்த செய்தியாளர் சந்திப்பு வாயிலாக தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.இதில் அனைத்து பத்த கோடிகளும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்தார். இதில் அறக்கட்டளை நிர்வாகிகள் பலரும் உடன் இருந்தனர்.