மோட்டார் வாகன உதிரி பாகங்கள் வியாபாரிகள் முன்னேற்ற சங்கம் சார்பாக சென்னை புதுப்பேட்டையில் குடியரசு தின கொடியேற்று விழா நடைபெற்றது.
சங்க செயலாளர் ஐ .பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சங்கத் தலைவர் ஏ .முகமது ரஃபி கொடியேற்றி விழாவை தொடக்கி வைத்தார். மேலும் பொருளாளர் எம் .கே. ஜாகிர் உசேன், துணைத்தலைவர்கள் டி .சுரேஷ்குமார்,எம் .ஷேக் அப்துல் காதர், துணை செயலாளர்கள் எஸ் . ஜாகிர் உசேன், ஏ .முகமது ரஃபிக்கான் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் காப்பாளர்கள் ஆலோசகர்கள் சங்க செயற்குழு உறுப்பினர்கள் வியாபாரிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர் .
தலைவர் ஏ . முகமது ரஃபி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது :- அனைவருக்கும் குடியரசு தின நல்வாழ்த்துக்கள் . இந்த குடியரசு தினத்தில் மோட்டார் வாகன உதிரி பாகங்கள் வியாபாரிகள் சங்கத்தின் சார்பாக தேசியக்கொடி ஏற்றுவதில் பெருமை கொள்கிறோம் .
இந்நாளில் மட்டுமல்ல இனி வரும் காலங்களில் சாதி மத பேதமற்ற, ஒற்றுமை மற்றும் நட்புணர்வோடு இருக்க அனைவரும் பாடுபடுவோம் .
மேலும் மோட்டார் வாகன உதிரி பாகங்கள் வியாபாரிகளுக்கு மாற்று இடத்தை தமிழக அரசு ஒதுக்கி உள்ளது .
அந்த இடத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்று முக்கிய கோரிக்கையை முன் வைக்கிறோம். சென்னையின் மையப்பகுதியான புதுப்பேட்டை சாலைகள், தெருக்கள் போக்குவரத்து நெரிசல், இடர்பாடுகளின்றி பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் . அதேநேரத்தில் ஒதுக்கப்பட்ட இடத்தில் வியாபாரத்தின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு நிறைவான சேவையை வழங்க முடியும் என்று அவர் தெரிவித்தார்.