செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அடுத்த சிங்கபெருமாள் கோவில் இரயில் நிலையங்களுக்கு இடையே ரூபாய் 90.74 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தில் வலதுபுற பகுதியினை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் முன்னிலையில் பொதுப்பணிகள், நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார்கள். இதில், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அரசு செய லாளர் டாக்டர். ஆர்.செல்வராஜ்
தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவன நிர்வாக இயக்குநர் டி.பாஸ்கர பாண்டியன், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ச.அருண்ராஜ், தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். ராஜா, செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் செம்பருத்தி துர்கேஷ், மறைமலைநகர் நகர்மன்ற தலைவர் ஜெ.சண்முகம், செங்கல்பட்டு நகர்மன்ற தலைவர் தேன்மொழி நரேந்திரன், மறைமலை நகர் நகர்மன்ற துணைத்தலைவர் சித்ரா கமலக்கண்ணன், மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்…