சென்னை வேளச்சேரி அடுத்த பேபி நகரில் நோ ஆயில் நோ பாயில் உணவகத்தின் திறப்பு விழாவில் சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தனர்….
உணவகத்தின் உரிமையாளர் கண்ணம்மா நீலகண்டன் அவர்களின் தலைமையில் சென்னை வேளச்சேரி தரமணி லிங்க் சாலையில் உள்ள பேபி நகர் பேருந்து நிலையம் அருகில் துவங்கப்பட்டுள்ள இந்த உணவகத்தினை பிரபல திரைப்பட ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு துவக்கி வைத்தார்..
புனித தோமையார் மலை ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சங்கீதா பாரதிதாசன், 177 வது வட்டக் கழக செயலாளர் மதிவாணன், சித்தாலப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் ரவி, பெருநகர சென்னை மாநகராட்சியில் 177 வது வார்டு மாமன்ற உறுப்பினர் பாஸ்கரன் செங்கல்பட்டு வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மற்றும் மாவட்ட செயல் அலுவலருமான ஆரோன் ஜோஸ்வா ரூஸ்வெல்ட் ஆகியோர் முன்னிலை வகித்த இந்த இயற்கை உணவகத்தின் துவக்க விழாவில் உணவகத்தின் உரிமையாளர்களின் உறவினர்கள் நண்பர்கள் உள்ளிட்ட பல கலந்து கொண்டனர்…
இது குறித்து செய்தியாளரிடம் பேசிய உணவகத்தை உரிமையாளர் கண்ணம்மா நீலகண்டன்..
தங்கள் உணவகத்தில் அடுப்பு மற்றும் எண்ணெய் இல்லாமல் 500க்கும் மேற்பட்ட உணவு வகைகள் உள்ளதாகவும், முற்றிலும் இயற்கை முறையில் உடலுக்கு தீங்கு விளைவிக்காத பொருட்களைக் கொண்டு உருவாக்கப்படும் இந்த உணவு வகைகளுக்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளதாகவும், காலை மதியம் இரவு என மூன்று வேளைகளும் தங்களின் உணவகத்தில் கிடைப்பதாகவும், வேளச்சேரி மற்றும் அதனை சுற்றியுள்ள வாடிக்கையாளர்கள் தங்கள் உணவுகதைக்கு வருகை தந்து இயற்கை முறையில் தயாரிக்கப்படும் உணவுகளை ருசி பார்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்…