தமிழ்நாடு சுதேசி வியாபாரிகளின் சங்கம் எனும் பெயரில் புதிய வியாபாரிகள் சங்கத்தின் துவக்க விழா மற்றும் கொடி அறிமுக விழா சென்னை மடிப்பாக்கத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது…
தமிழ்நாட்டில் புதிதாக துவங்கப்பட்டுள்ள தமிழ்நாடு சுதேசி வியாபாரிகளின் சங்கத்தின் அறிமுக விழாவில் முன்னாள் காவல்துறை அதிகாரி பொன் மாணிக்கவேல் அவர்கள் குத்துவிளக்கேற்றி விழாவினை துவக்கி வைத்தார்…
மேலும் சங்கத்தின் பெயர் மற்றும் கொடியினை தொழிலதிபர் ஜோன்ஸ் அவர்கள் அறிமுகம் செய்து வைத்து,மறைந்த வெள்ளையன் அவர்களின் திரு உருவ படத்தினை திறந்து வைத்து சங்கத்தின் நிர்வாகிகளுடன் இணைந்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்…
தமிழ்நாடு சுதேசி வியாபாரிகளின் சங்கத்தின் தலைவர் கிருஷ்ணகுமார் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த புதிய வியாபாரிகள் சங்கத்தின் அறிமுக விழாவில், தஞ்சை மாவட்ட வணிகர் சங்க கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் ராஜா சீனிவாசன், சங்கத்தின்
மாநில செயலாளர்
விஜயகுமார்,
மாநில பொருளாளர்
ஷா மற்றும்
மாநில துணை தலைவர்
இராமநாதன்,
முத்துராமலிங்கம்,
மாநில துணை பொதுச்செயலாளர்
கோட்டூர் பாலாஜி உள்ளிட்ட சங்கத்தின் முக்கிய
நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் என என பலர் கலந்து கொண்டனர்….
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சங்கத்தின் தலைவர் கிருஷ்ணகுமார் கூறுகையில்,
தற்போது புதிதாக துவங்கப்பட்டுள்ள தமிழ்நாடு சுதேசி வியாபாரிகளின் சங்கம் வியாபாரிகளின் நலனுக்காக பாடுபடுவதை முதன்மையாக கொண்டு செயல்பட உள்ளதாகவும், மேலும் வியாபாரிகளின் பிரச்சினைகளை தீர்ப்பதை முழுமூச்சாக கொண்டு செயல்பட உள்ளதாக தெரிவித்த அவர், வருங்காலங்களில் தங்களின் சங்கத்தின் சார்பாக வணிகர் தின விழா சிறப்பாக கொண்டாடப்படும் என தெரிவித்தார்….