சதீஷ்கர் மாநிலம் ராய்பூரில் நடைபெற்ற சி பி எஸ் இ பள்ளி மாணவர்களுக்கான தேசிய அளவிலான தடகளப் போட்டிகளில் கலந்து கொண்டு 19 வயதிற்குட்பட்ட பிரிவில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் மற்றும் 6 தங்கம் உள்ளிட்ட 8 பதக்கங்களை வென்று சென்னை திரும்பிய ஸ்ரீ கிரிஸ் சர்வதேச பள்ளியின் மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகம் சார்பாக உற்சாக வரவேற்பு, 2.25 லட்சம் பரிசு தொகை வழங்கி பாராட்டு.. .
சென்னையையடுத்த கோவூரில் உள்ள ஸ்ரீ கிரிஸ் சர்வதேச பள்ளியில் பயிலும் மாணவர்கள் சி பி எஸ் இ பள்ளிகளுக்கான தேசிய அளவிலான தடகளப் போட்டிகளில் பங்கேற்று 6 தங்கம், ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலம் உள்ளிட்ட பதக்கங்கள் மற்றும் 19 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்று சென்னை திரும்பிய மாணவர்களுக்கு பள்ளியின் சார்பாக திறந்தவெளி வாகனத்தில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது …
மேலும் பள்ளியின் சார்பாக அதன் நிறுவனர் கிருஷ்ணமூர்த்தி 2.25 லட்சம் பரிசுத் தொகைகளை வழங்கி வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்…
மேலும் இந்த நிகழ்வின் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர்கள், பள்ளியின் ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வெற்றி பெற்று பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்தனர்…