Sunday, January 19, 2025
ஃபாஸ்ட்ராக் ஸ்மார்ட் அறிமுகப்படுத்தும் ஸ்டைலின்அடுத்த பரிணாமம்! கண்களைக் கவரும் கம்பீரம்மற்றும் ஃபேஷனை வெளிப்படுத்தும், மெட்டல் சீரிஸ்அறிமுகம்!!
Business

ஃபாஸ்ட்ராக் ஸ்மார்ட் அறிமுகப்படுத்தும் ஸ்டைலின்அடுத்த பரிணாமம்! கண்களைக் கவரும் கம்பீரம்மற்றும் ஃபேஷனை வெளிப்படுத்தும், மெட்டல் சீரிஸ்அறிமுகம்!!

சென்னை: இளைய தலைமுறையினருக்கான இந்தியாவின்முன்னணி ஃபேஷன்-டெக் பிராண்டான ஃபாஸ்ட்ராக் ஸ்மார்ட்[Fastrack Smart, India’s leading fashion-tech brand],புதிய மெட்டல் சீரிஸ் [Metal Series] ஸ்மார்ட் வாட்ச்களைஅறிமுகப்படுத்துகிறது. தொழில்நுட்பத்தில் மிகவும் மேம்பட்ட,கண்களைக் கவரும் அசத்தலான ஸ்டைலில், மெட்டாலிக்பிரிவில் இந்த ஸ்மார்ட் வாட்ச்சை வடிவமைத்திருக்கிறதுஃபாஸ்ட்ராக் ஸ்மார்ட். இளம் இந்தியாவுக்காக பிரத்தியேகமாகவடிவமைக்கப்பட்ட உற்சாகத்தை அளிக்கும்  ஒன்றாகஅறிமுகமாகி இருக்கும் இந்த புதிய ஸ்மார்ட் வாட்ச் தொகுப்பு,உயர் தரத்திலான வடிவமைப்பையும், மலிவு விலையில்அதிநவீன அம்சங்களை  ஒன்றிணைக்கும் வகையில்அறிமுகமாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.   இதனால் ஸ்மார்ட்வாட்ச் பிரிவில் இதுவரையில்லாத ஒரு புதிய பாணியிலானவரையறையை உருவாக்கி இருக்கிறது. டைட்டன் தயாரிப்புகளில் ஒன்றான ஃபாஸ்ட்ராக், இந்தியாவின்இளைய தலைமுறையினர்களுக்காக நவீன ஃபேஷனைமுன்னெடுக்கும் வகையிலான கைக்கடிக்காரங்களைதொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது.  இதன் தொடர்ச்சியாகதற்போது, கண்களைக் கவரும் கம்பீரமான தொகுப்பாகவெளியாகி இருக்கும் மெட்டல் சீரிஸ் டைட்டனின் மரபுக்கு ஒருஅடையாளமாக அமைந்திருக்கிறது.  அதிநவீனதொழில்நுட்பத்துடன் பிரீமியம் மெட்டாலிக் அழகியலைக்கலந்திருப்பது, நவீன பாணியையும், தயாரிப்பின் நேர்த்தியையும்கலந்திருக்கும் ஃபாஸ்ட்ராக்கின் குணாதியசயத்தைவெளிப்படுத்துகிறது. ஃபாஸ்ட்ராக்கின் துருப்பிடிக்காதஸ்டெய்ன்லெஸ்-ஸ்டீல் கடிகாரங்களின் கம்பீரம் மற்றும் உறுதிஆகியவற்றினால் ஈர்க்கப்பட்டு, இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச்தொகுப்பு பிரீமியம்-தரத்திலான மெட்டலை கொண்டுவடிவமைக்கப்பட்டுள்ளது. கைக்கடிகாரம் அணிவதற்கானகைப்பட்டையும் துருப்பிடிக்காத மெட்டலினால்வடிவமைக்கப்பட்டிருப்பது கூடுதல் சிறப்பு.ஸ்டெய்ன்லெஸ்-ஸ்டீல் மெட்டலின் தரம் நீடித்துஉழைக்கக்கூடியதாகவும், நீண்ட ஆயுளை உடையதாகவும்இருப்பதை, பல கடுமையான சோதனை செயல்முறைகளுக்குஉட்படுத்தி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. டைட்டன் நிறுவனத்தின் வியரபிள்ஸ் என்றழைக்கப்படும்அணியும் பயன்பாட்டு உபகரணங்கள் [Wearables] பிரிவின்விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவுத் தலைவர் ஆதித்யாராஜ் [Adithya Raj, Head - Sales & Marketing – Wearables, Titan Company Ltd] தி மெட்டல் சிரீஸ்அறிமுகம் குறித்து பேசுகையில், "ஃபாஸ்ட்ராக் ஸ்மார்ட்[Fastrack Smart],இந்திய இளைய தலைமுறையினரின் ஃபேஷன் அம்சங்களை, தனது தனித்துவமான பாணி மற்றும்உயர் தொழில்நுட்பம் ஆகியவற்றுடன்  மிகச்சரியான விகிதத்தில்கலந்து புதிய வரையறையை உருவாக்கியுள்ளது. ஜெனரேஷன்இசட்-டின் எதிர்பார்புகள் மற்றும் தேவைகளை பூர்த்தி செய்யும்தயாரிப்புகளில் ஒன்றாக, நவீன போக்கை உருவாக்கும்ட்ரெண்ட் செட்டிங் தயாரிப்பாக மெட்டல் சீரிஸ் அறிமுகப்படுத்திஇருப்பது எங்களின் அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாகும்.. இந்தபுதிய ஸ்மார்ட் வாட்ச் தொகுப்பு, ஸ்மார்ட்வாட்ச் பிரிவைஅடுத்தக்கட்டத்திற்கு அழைத்து செல்வதோடு மட்டுமல்லாமல்,இன்றைய நவீன தலைமுறையினர்களால் மிகவும் அதிகம்நேசிகப்படும் ஒரு பயன்பாட்டு உபகரணமாகவும் முக்கியத்துவம்பெறும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். ஃபாஸ்ட்ராக்ஸ்மார்ட்டை பொறுத்தவரையில், வியரபிள் டெக்னாலஜிஎனப்படும் அணியும் பயன்பாட்டு உபகரணங்களுக்கானதொழில்நுட்பத்தில் நாங்கள் தொடர்ந்து முன்னணியில்இருப்பதோடு,அனைவரையும் கவரும் நவீன பாணியிலானவடிவமைப்புகளுடனான தயாரிப்புகளை, எல்லோரும் வாங்ககூடிய விலையில் வழங்குவதை எங்களது இலக்காக கொண்டு,அதற்கான அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறோம். இந்தபுதிய மெட்டல் சிரீஸ் ஸ்மார்ட் வாட்ச்களுடன் இன்றைய இளையதலைமுறையினர் கம்பீரமாக வலம் வருவதைக் காண ஆவலுடன்இருக்கிறோம்’’ என்றார். ஃபாஸ்ட்ராக் ஸ்மார்ட் மெட்டல் சீரிஸ் என்பது உத்வேகமிக்க,உற்சாகமளிக்கும் வகையில் பல்வேறு மாற்றங்களைக்கொண்டிருக்கும் உங்கள் வாழ்க்கைமுறையில், உங்களைஎந்தவித தடையுமின்றி ஒருங்கிணைக்கும் வகையில்வடிவமைக்கப்பட்ட ஒரு அசாத்தியமான தொழில்நுட்ப அம்சமாகஇருக்கிறது.

ஸ்ரீ வித்தக விநாயகர் ஸ்ரீ சந்தோஷி மாதா ஆலயத்தின் கும்பாபிஷேக விழா

https://youtu.be/Kby4vUlELNY?si=PTBb-3YOQFknBL95 சென்னை புழுதிவாக்கம் அன்னை சத்யா நகரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ வித்தக விநாயகர் ஸ்ரீ சந்தோஷி மாதா ஆலயத்தின் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர்.. முன்னதாக திருக்கோவிலில் மகா கணபதி ஹோமம் ஸ்ரீ மகாலட்சுமி மற்றும் நவகிரக ஹோமம் நடைபெற்றது, பின்னர்…

KRAFTON Developers Reveal New Features and Roadmap for inZOI and Dark and Darker Mobile at gamescom 2024 Showcase
Business

KRAFTON Developers Reveal New Features and Roadmap for inZOI and Dark and Darker Mobile at gamescom 2024 Showcase

Delhi - August 22, 2024 – To celebrate gamescom 2024, KRAFTON, Inc (CEO CH Kim) hosted a special showcase, giving attendees the opportunity to hear from Producer and Director, Hyungjun Kim, forthe upcoming life simulation inZOI and Executive Producer, Jooseok Ahn, for the extraction RPG Dark and Darker Mobile. From the…

Tamil Nadu Chief Minister Thiru. M. K. Stalin lays the foundation of Hyundai Motor India Limited’sHydrogen Innovation Centre
Business Uncategorized

Tamil Nadu Chief Minister Thiru. M. K. Stalin lays the foundation of Hyundai Motor India Limited’sHydrogen Innovation Centre

Chennai | August 21, 2024: Hyundai Motor India Limited (HMIL) announced the Groundbreaking Ceremony of its hydrogen innovation centre at the Tamil Nadu Investors Conclave 2024, held at Chennai. This new facility is being developed through a strategic partnership with the Indian Institute of Technology Madras (IITM), Guidance Tamil…

78 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு திருக்கோயிலில் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நிகழ்ச்சி

https://youtu.be/pZ3e5Q6a4do?si=TMG371URBI-A3r6k நாட்டின் 78 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் திருக்கோயிலில் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது … இதில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பு…