குச்சிப்புடி ஆர்ட் அகாடமி, தான் பெரிதும் மதித்துப் போற்றும் நிறுவனரான பத்ம பூஷண் டாக்டர் வேம்பட்டி சின்ன சத்யம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, ‘கபிசூத்ரா – பக்தியின் தெய்வீக அருள்வழி நெறிமுறை‘ (KAPISUTRA – The Divine Algorithm of Bhakthi) என்ற நாட்டியப் படைப்பை வழங்குகிறது. பூஜ்யஶ்ரீ துளசிதாசர் இயற்றிய புனிதமான அனுமன் சாலிசாவின் அற்புதமான கவிதை வரிகள் மற்றும் பகவான் அனுமனின் கதையின் மூலம் பக்தியின் ஆழமான சக்தியை இந்த நாட்டியப் படைப்பு நேர்த்தியாக வெளிப்படுத்துகிறது.
குச்சிப்புடியின் உணர்வுபூர்வமான நடன மொழியின் மூலம், அனுமனின் பக்தி, வலிமை மற்றும் அசைக்க முடியாத நம்பிக்கையை ‘கபிசூத்ரா’ உயிர்ப்புடன் கண்முன் நிறுத்துகிறது. அனுமன் சாலிசாவின் வரிகளை அடிப்படையாகக் கொண்டு, அதன் ஆன்மீக தாக்கத்தை நடனஅசைவுகள், முகபாவனைகள் மற்றும் இசை வடிவத்தில் இப்படைப்பு பார்வையாளர்களுக்கு இப்படைப்பு வழங்குகிறது. மேலும், இந்த பாரம்பரிய நடனத்தின் மூலம் காலத்தைக் கடந்து பல யுகங்களாக நிலைத்து நிற்கும் பக்தியின் முடிவில்லாத சக்தியை அனுபவித்து உணருமாறு பார்வையாளர்களை இது அழைக்கிறது.
டாக்டர் வேம்பட்டி சின்ன சத்யம் அவர்களின் கலை கண்ணோட்டத்தையும், தனித்துவமான நடன பாரம்பரியத்தையும் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும் ஆச்சார்யா ஸ்ரீமாயி வேம்பட்டி அவர்களின் குச்சிப்புடி பாணியில் இந்த நடன படைப்பு வழங்கப்படுகிறது. குச்சிப்புடி கலையை தொடர்ந்து பேணி வளர்த்து, பாதுகாத்து மேம்படுத்துவதற்கான தனது அர்ப்பணிப்பை இந்த படைப்பின் மூலம் அகாடமி மீண்டும் உறுதிப்படுத்துகிறது. அதே சமயம், புதிய நடன அமைப்புகளின் மூலம் அக்கலையின் தொடர்ச்சியான சிறப்பையும் இது ஆராய்கிறது.
நாள்: அக்டோபர் 23, 2026
நேரம்: மாலை 6:30 மணி
இடம்: பாரதிய வித்யா பவன், சென்னை
அதிக விவரங்களுக்கு அல்லது விசாரணைகளுக்கு: aalaap.concepts@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எழுதவும்

