மகேந்திரா புதிய ரக வகை மின்சாரத்தில் இயங்கக்கூடிய கார் பெட்ரோல் டீசல் வாகனத்தின் அறிமுக விழா

சென்னையில் மகேந்திரா நிறுவனத்தின் புதிய ரக வகை மின்சாரத்தில் இயங்கக்கூடிய கார் பெட்ரோல் டீசல் வாகனத்தின் அறிமுக விழா . நடந்தது

புதிய ரக வகையான XEV 9S மற்றும்XUV7XO என்கின்ற புதிய ரக வாகனத்தை வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தியது மகேந்திரா நிறுவனம்..

இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான மஹேந்திரா நிறுவனம்
பல்வேறு வகையான கார்களை தொடர்ந்து தயாரித்து தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது

இந்திய சாலைகளுக்கு ஏற்றவாறு அவ்வப்போது புதியரக வகையான கார்களை தயாரிப்பதில் மகேந்திரா நிறுவனம் வெற்றி கண்டு வருகிறது.

சுற்றுச்சூழல் மற்றும் காற்று மாசுபாடு இவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் தனது நிறுவனத்தின் வாகனங்களை தயாரித்துள்ளது

இந்த வகையில் மகேந்திரா நிறுவனம் தனது புதிய ரக
பெட்ரோல் டீசல் மற்றும மின்சாரத்தில் இயங்கக்கூடிய எலக்ட்ரிக் வாகனத்தை தயாரித்து அதனை தனது வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி
சென்னை வேளச்சேரி நட்சத்திர விடுதியில் நடைபெற்றது .

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக நடிகை சிவானி நாராயணன் குத்து விளக்கேற்றி, கார் அறிமுக நிகழ்ச்சியை துவங்கி வைத்தார் இந்த நிகழ்ச்சியில் பெட்ரோல் டீசல் வாகன உற்பத்தியின் ரீஜினல் சேல்ஸ் மேனேஜர் கார்த்திக் மற்றும் எலக்ட்ரிக்கல் வாகன உற்பத்தியில்ரீஜினல்சேல்ஸ் மேனேஜர் தாமஸ் கலந்து கொண்டு காரின் சிறப்பம்சங்கள் குறித்து வந்திருந்த வாடிக்கையாளர்களுக்கு எடுத்துரைத்தனர் ரீஜனல் வாடிக்கையாளர் மேலாளர் மீனாட்சி சுந்தரம் deputy RSM விரேந்தர் அம்பத்தூரில் இயங்கி வரும் மகேந்திரா அண்ட் மகேந்திரா நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர்
பங்கஜ் கங்காரியா
நிர்வாக இயக்குனர்
பங்கஜ் மாணோட் மற்றும் ஆசிப் பராப்
நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டனர்

மேலும் இந்த புதிய வகையான மகேந்திரா காரின் முன்பதிவானது வருகின்ற 14ஆம் தேதி முதல் துவங்கும் என தெரிவிக்கப்பட்டது

மூன்று ரக இயக்கங்களில் கிடைக்கும் வகையில் இந்த வகையான வாகனங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது .

மேலும் இந்த வகையான கார்கள்
59 மற்றும் 79 பேட்டரி பேக்குகளில் ஒரு ஒருமுறை சார்ஜ் செய்தால் சுமார் 500 கிலோ மீட்டர் வரை செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது

இந்த XEV9S ஆரம்ப விலை ரூபாய் 19 லட்சத்து 95 ஆயிரம் முதல் அதன் தரத்திற்கு ஏற்ப விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் மற்றும் XUV 7XO 13 லட்சத்து 66 ஆயிரம் முதல் அதன் தரத்திற்கு ஏற்ப மாறுபடும் என்று தெரிவித்தனர் இந்த சொகுசு கார் சென்னையில் உள்ள அனைத்து மகேந்திரா ஷோரூம்களில் டெஸ்ட் டிரைவ் கிடைக்கும் என மகேந்திரா நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது.

Launch