தமிழ்நாட்டின் முதல் கருத்தரிப்பு சிகிச்சை ஆரோக்கியமான பெண் குழந்தையை பெற்றெடுத்த 37 வயது பெண்

தமிழ்நாட்டின் முதல் கருத்தரிப்பு சிகிச்சை ஆரோக்கியமான பெண் குழந்தையை பெற்றெடுத்த 37 வயது பெண்

சென்னை, 1 அக்டோபர், 2026: 9 ஆண்டுகளாக குழந்தைப் பேறு இல்லாத 37 வயது பெண்ணுக்கு ரோபோ சாதன உதவியுடன் ‘இன்ட்ராசைட்டோபிளாஸ்மிக் ஸ்பெர்ம் இன்ஜெக்‌ஷன்’ (ICSI) சிகிச்சையை தியா கருவளம் மற்றும் மகப்பேறு மையம் தமிழ்நாட்டில் முதல் முறையாக வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது. இந்த அதிநவீன கருத்தரிப்பு சிகிச்சையின் மூலம் அந்தப் பெண் கர்ப்பம் தரித்து, முழு கர்ப்ப காலத்திற்குப் பிறகு சுகப்பிரசவம் மூலம் ஆரோக்கியமான பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.

அந்தப் பெண்ணுக்கு வகை 2 நீரிழிவு நோய் மற்றும் குறைவான கருமுட்டை இருப்பு பிரச்சினை இருந்தது. நேரடியாக கருப்பையில் விந்தணுக்கள் செலுத்தப்படும் ஐயுஐ (IUI) சிகிச்சை இவருக்கு இரண்டு முறை செய்யப்பட்டு பலனளிக்காத நிலையில், அவர் ஐவிஎஃப் (IVF) சிகிச்சைக்கு மாறினார். இதில் ஆய்வகத்தில் வழக்கமான ICSI முறையில் விந்தணுக்களுடன் சேர்த்து கரு உருவாக்கப்பட்டது. கரு உருவாகி கர்ப்பப்பைக்கு மாற்றப்பட்ட போதிலும், அந்த சுழற்சியால் கர்ப்பம் ஏற்படவில்லை.

அவரது குறைந்த கருமுட்டை இருப்பு மற்றும் முந்தைய தோல்வியுற்ற கருத்தரிப்பு சிகிச்சைகளைக் கருத்தில் கொண்டு, தியா கருவளம் மற்றும் மகப்பேறு மையம் அவருக்கென பிரத்யேகமான ஒரு சிகிச்சை முறையைக் கையாண்டது. அதன்படி, அக்டோபர் மற்றும் நவம்பர் 2025-ல் இரண்டு முறை கருமுட்டை சேகரிப்பு மேற்கொள்ளப்பட்டு, முதிர்ச்சியடைந்த மூன்று கருமுட்டைகள் எடுக்கப்பட்டன. அவை கருத்தரிப்பதற்கு ஏற்றதாக இருந்தன.

மருத்துவக் குழு, வழக்கமான ஐசிஎஸ்ஐ முறைக்குப் பதிலாக, ரோபோ உதவியுடனான ஐசிஎஸ்ஐ முறையைப் பயன்படுத்தி, ஒவ்வொரு முதிர்ந்த கருமுட்டைக்குள்ளும் ஒற்றை விந்தணுவைச் செலுத்தியது. மூன்று கருமுட்டைகளும் கருத்தரித்து, உருவாகிய கருக்கள் 5-வது நாள் வரை வளர்ச்சியடைந்து இளம்கரு (பிளாஸ்டோசிஸ்ட்) நிலையை அடைந்தன. மீண்டும் ரோபோடிக் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, ஜனவரி 12, 2026 அன்று 5 நாள் வளர்ச்சி அடைந்த ஒரு வளர்க்கருவை மருத்துவக் குழுவினர் கருப்பையில் பொருத்தினர். இயல்பான, சிக்கல் இல்லாத கர்ப்ப காலத்தின் இறுதியில் ஒரு ஆரோக்கியமான பெண் குழந்தை பிறந்தது.

வழக்கமான ஐசிஎஸ்ஐ முறையில், எம்ப்ரியாலஜிஸ்ட்(கருவியலாளர்) மெல்லிய உறிஞ்சும் கருவி மூலம் கருமுட்டையைப் பிடித்துக்கொண்டு, நுண்ணிய ஊசி மூலம் விந்தணுவை அதற்குள் செலுத்துவார். ரோபோடிக் ஐசிஎஸ்ஐ செயல்முறை இந்த உறிஞ்சும் வழிமுறைக்குப் பதிலாக, நுட்பமான மெக்கானிக்கல் கிரிப்பரை பயன்படுத்துகிறது. இது கருமுட்டையைப் பாதுகாப்பாகவும் நிலையாகவும் பிடித்துக் கொள்கிறது. துல்லியமான செயல்பாடுகளை வழங்குவதன் மூலம், கருமுட்டையை நிலைநிறுத்துவதிலும் விந்தணுவைச் செலுத்துவதிலும் ரோபோடிக் அமைப்பு சிறப்பான கட்டுப்பாட்டை சாத்தியமாக்குகிறது.

தியா கருவளம் மற்றும் மகப்பேறு மையத்தின் இயக்குநரும் மகப்பேறியல் நிபுணருமான டாக்டர் கீர்த்தனா அஸ்வின்தலைமையிலான பல்துறை மருத்துவக் குழு இந்த சிகிச்சை செயல்முறைகளை மேற்கொண்டது. இதில் மயக்கவியல் நிபுணர் டாக்டர் பூவண்ணன் மற்றும் மூத்த கருவியலாளர் திருமதி ஸ்ரீநித்யா K. ஆகியோர் சிகிச்சை மற்றும் கரு வளர்ச்சியியல் செயல்முறைகளுக்கு உறுதுணையாக இருந்தனர்.

Health